மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் சிவன் காட்சியளித்தார் என்கிறார்களே. இந்த
காலத்தில் ஏன் அத்தகைய காட்சி நமக்கு கிடைக்கவில்லை?
காட்சி கொடுக்க சுவாமி தயாராகவே இருக்கிறார். ஆனால், மாணிக்கவாசகர் போன்ற அடியவர்கள் தான் இன்றில்லை. அவர் பாண்டிய மன்னரிடம் அமைச்சராக இருந்தபோது, குதிரை வாங்க பணம் கொடுத்து அனுப்பினான். சிவனையே சிந்தித்த அவருக்கு ஆவுடையார்கோவில் குருந்த மரத்தடியில் காட்சியளித்து உபதேசம் செய்தார். குதிரை வாங்க வேண்டிய பணத்தில் கோயிலைக் கட்டினார் மாணிக்கவாசகர். இதனால், மன்னனின் கோபத்திற்கு ஆளாகி பல துன்பங்களை அடைந்தார். அப்போதும் மனம் சிவபக்தியிலேயே ஈடுபட்டது. இவரது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம், நன்மையிலும், தீமையிலும் மனம் தளராத பக்தி வேண்டும் என்பது தான். இப்போது கேட்டது கிடைக்கவில்லை என்றாலே, நாம் சுவாமியிடம் கோபித்துக் கொள்கிறோமே!

No comments:
Post a Comment