பெண்கள் தங்களது சகோதரர் மற்றும் சகோதரர்களாக பாவிபவர்களுக்கு ராக்கி அணிவிக்கும் தினமே ரக்ஷா பந்தன் விழாவாகும்.
ரக்ஷாபந்தன், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடபடும் பண்டிகையாகும். பெண்கள் பூஜையில் மஞ்சள்_நூலை வைத்து பூஜைசெய்து, தங்ககள் சகோதரர்கள் பல்லாண்டுகாலம் நலமாக வாழவேண்டி அந்த
மஞ்சள் கயிறை தமது சகோதரர்கள், (அல்லது) சகோதரர்களாக பாவிபவர்களின் கை மணிக்கட்டில் கட்டுவதுதான் இந்தபண்டிகையின் முக்கிய அம்சம் .
ஒரு ஆண் இந்த மஞ்சள்கயிறை கட்டிக்கொள்வதன் மூலம் , அந்த சகோதரியின் வாழ்க்கை பாதுகாப்பிற்கும், நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி கூறுவதாக கருதபடுகிறது.
சகோதரனின் கையில் அன்பு சகோதரி ராக்கிகட்டி அவனுடைய சுபீட்சத்தி ற்கு பிராத்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறையபரிசுகள் கிடைக்கின்றன.
சகோதர ராக்கி கட்டியவுடன் சகோதரன் தனது சகோதரிக்கு ஒருபரிசு அல்லது பணத்தை அன்புடன் தருவது வழக்கம். இதை பொதுவாக இந்துக்கள் மட்டுமே கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது பலமதத்தை சேர்ந்தவர்களும் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பழகுபவர்களுகும் ராக்கி கட்டி கொண்டாடுவதால், இது இந்து பண்டிகை என்பது மாறி சமுதாய பண்டிகை என்ற அடையாளத்தை பெற்றுவருகிறது.
ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு எல்லா கடைகளிலும் பல வண்ணத்தில் ராக்கிகளும், இனிப்புகளும் விற்பனைக்கு_வந்துள்ளன.
வடஇந்தியாவில் மட்டும் சிறப்பாக கொண்டாடபட்டு வந்த இந்தபண்டிகை தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. நல்ல விஷயங்கள் பரவுவது நல்லதுதானே.
இது ஒரு அன்புபந்தம். சகோதரன் சகோதரியை பாசத்தினால் கட்டி போடும் ஒரு அன்புபாலம். இவை சிராவண பூர்ணிமாவில் வருகிறது. வயதோ ஜாதிபேதமோ இதற்கு கிடையாது. பழங்காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்கு போகும் முன்பு இரத்த திலகமிட்டு, கையில்_ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன் திரும்பி வா" என வழியனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம் பெண்ணையும் சகோதரியாக எற்ற்று கொண்டது உண்டு. மஹாபாரத காலத்திலும் ஸ்ரீகிருஷ்ணர் துருதிராஷ்டருக்கு வரப்போகும் அபாயதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ரக்ஷை கட்டிக்க சொல்கிறார்.
பலி சக்கிரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தை காக்க சத்தியம்கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டுவந்தார். லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்க பிரியப்பட்டு ஒரு பெண்வேஷம் தரித்து பலியிடம் அடைக்கலம்_புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச்சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள் என்பது புராண கதை
சகோதரதுவத்தை வெளிக்காட்டும் பண்டிகையாக ரக்ஷாபந்தன் பழங்காலம்தொட்டு கொண்டாடபட்டு வருகிறது. கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை_(ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன்கில்ஜி படைகளுடன் தாக்க வரும்போது, சித்தூர்கர் ராணி பத்மினி அண்டைநாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக்குறிப்புகள் உள்ளன.
ராணி பத்மினி ராக்கி அனுப்பியதன்-மூலம் அண்டை நாட்டு மன்னர்கள், தனது சகோதரியையும், அவர்களது ஆட்சிப்பகுதியையும் காக்க வேண்டிய கடைமை உருவானது . எனவே அந்த மன்னர்கள் தங்களது படைகளை அனுப்பி சுல்தான் அலாவுதீனுடன் போர்புரிய ஏற்பாடு செய்ததும் குறிப்பிடதக்கது.
சிலர் தங்களை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் ஆண்களை ராக்கி கட்டி விடுவதாக கூறி பயமுறுத்து வார்கள். இது மிகபெரிய தவறு. ஏன் எனில், சகோதர அன்பையும், அவர்களது நலனையும் வேண்டி, சகோதரி கடவுளிடம் பூஜித்துதான் இந்த ராக்கியை கட்டுவார்.
அதை போன்று கயிறு கட்டிகொண்ட சகோதரனும், தனது_சகோதரியின் நலனிலும், பாதுகாப்பிலும் அக்க றை கொண்டவராக இருப்பார். இப்படிபட்ட ஒருபுனிதமான பண்டிகையை விளையாட்டாக செய்யாமல் தாங்கள் உண்மையி லேயே சகோதரனாக பாவிக்கும் ஆண்களுக்கு இந்த ராக்கியை கட்டி உங்களது உறவை இன்னும் பலப்படுத்திக்கொள்ள மட்டும் ராக்கி கட்டலாம்.
எனக்கு தெரிந்து இந்திய கலாசாரத்தில் ரக்ஷா பந்தன் ஒன்றுதான் உறவை கொண்டாடும் பண்டிகை. மற்ற Fathers day, Mothers day போன்றவை எல்லாமே மேற்கத்திய கலாச்சாரங்கள்தான்.
Tags;உறவை மேம்படுத்தும் ரக்ஷா பந்தன், ராக்கி அணிவிக்கும் தினமே ரக்ஷா பந்தன்,

ரக்ஷா பந்தன் வரலாறு

No comments:
Post a Comment