Sunday, April 26, 2015

சங்கூதுவதில் என்ன மகத்துவம்:

சங்கூதுவதில் என்ன மகத்துவம்:
-------------------------------------------------
சங்கொலியின் மகிமையைப் பற்றி சாஸ்திரமும் ஆசாரவிதிகளும் ஏராளம் தகவல்கள் வெளியிட்டுள்ளன.பொதுவாக கோயிலிலே நாம் சங்கொலி உயருவதைக் கேட்கின்றோம்.தீபாராதனை வேளையில் மந்திரம் ஜெபிக்கும் ஓசை,மணி மற்று சங்கின் ஓசை என்பவை காதுக்கு இன்பமூட்டும்போது ,தேவ விக்கிரகங்களுக்கு முன் தீபச் சுடர்கள் உயருவதும் காணும்போது பக்தரில் பரவசம் நிறைவதும் மனதில் நிம்மதி பிறப்பது நாம் கண்டறிந்திருக்கின்றோம்.
இறைவனைச் சார்ந்த "ஓம்"எனும் மங்கள ஓசையே சங்கிலிருந்து எழும்புவது.விளம்பர ஒலியாகவும் சந்கூதுவதை காண்பதில் தவறில்லை.குரு சேஷ்த்திர யுத்தத்தின் ஆரம்பத்தில் போர்க்களத்தில் எழுப்பக் கேட்ட சங்கொலி அறிந்தவர் மனதிலிருந்து ஒருபோதும் மறைவதில்லை.
சங்கை உரைத்து சில நோய்களுக்கான மருந்துக் கலவையில் சேர்ப்பது உண்டு அல்லவா!இதிலிருந்து சங்கில் ஓர் தனிப்பட்ட மருத்துவ குணம் இருப்பதை அறியலாம்.
சங்கிலிருந்து உயரும் ஒழி அலைகளை பெற்றுக் கொள்ளும் நபரின் மூலையில் பயன் தரும் அதிர்வுகள் உண்டாகும் என்று நவீன சாஸ்திரம் கண்டறிந்துள்ளது.

No comments:

Post a Comment