ராமு வள்ளால கண்டன். ரூம் போட்டு யோசிப்பானோ என்னவோ, அவன் செய்யும் தகிடு தித்தம் எல்லாம் மிக நவீனமாகவே இருக்கும்.
ஒருநாள் அவனுக்கு திடீர் பணத்தேவை. 2000 ரூபாய் பணம் தேவை பட்டது. அவனுக்கு தான் கம்ப்பியூட்டர் முளையாசே, பட்டுன்னு ஒரு யோசனை தோணிச்சு. சோமுவை பார்க்க போனான்.
சோமு யாரு?
தயாள குணம், தாராள மனப்பான்மை, என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைக்கு ஏத்த மாதிரி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அவனுக்கு நிகர் அவனே.
ராமு பணம் கேட்டதும் கொஞ்சம் கூட யோசிக்கலை. ஒரு வாரத்திலே திருப்பி தர்றேன்னு சொன்னவனுக்கு பணத்தை கொடுத்தான்.
பணம் வாங்கியாச்சு, அதை செலவும் செய்தாச்சு. அதை திருப்பி தரணுமே எப்படி?
கில்லாடி ராமு யோசித்தான். இன்னொரு இரக்க குணம் உள்ள குமாரை போய் பார்த்தான். ஒரு வாரத்திலே தர்றேன்னு கடன் கேட்டான். குமாரும் கொடுத்தான்.
பணத்தை வாங்கிய ராமு, முதலில் கடன் வாங்கிய சோமுவிடம் நாணயமாய் திருப்பி கொடுத்தான்.
நாட்கள் கடந்தது. ஒரு வாரம் ஆய்டுச்சு. ரெண்டாவதா பணம் வாங்கின குமாருக்கு பணத்தை திருப்பி தரணுமே... என்ன செய்யலாம்.... என்று யோசித்தவன், முதல் நண்பன் சோமுவை போய் பார்த்தான். இவன் தான் பணம் வாங்கி நாணயமாய் திருப்பி கொடுத்து விட்டானே. அதனால் அவனும் கொடுத்தான்.
இப்படியே ரெண்டு மூணு முறை நடந்துடுச்சு. சோமுவிடம் வாங்கி குமாரிடம் கொடுப்பதும், குமாரிடம் வாங்கி சோமுவிடம் கொடுப்பதுமாய் இருந்தவனுக்கு ஒரு சூப்பர் யோசனை சிக்கிச்சு.
சோமு குமார் ரெண்டு பேரையும் கூப்பிட்டன். சோமு உங்க கிட்டே கடன் வாங்கினேன். அந்த கடனை திருப்பி தர குமார் கிட்டே வாங்கி உங்களுக்கு கொடுத்தேன். அதை திருப்பி தர மீண்டும் உங்க கிட்டே கடன் வாங்கினேன்.
இப்போ இடையிலே நான் எதற்கு. அதுனால 2000 ரூபாயை குமார் கிட்டே கொடுங்க. ஒரு வாரம் கழித்து அந்த பணத்தை அவர் திருப்பி தருவார். மறுவாரம் அவர் கிட்டே நீங்க வாங்குங்க.
சோமுவிற்கும் ராமுவிற்கும் மயக்கம் வந்து இருக்குமா இல்லையா? இப்படிதான் கடன் வாங்குற வரைக்கும் கடவுளே தெய்வமேங்கிறது, வாங்கி முடிந்ததும் வினோத ஜந்துவை பார்க்கிற மாதிரி பார்க்கிறது. சரி போகட்டும்.
நீங்கள் இரக்க குணம் உடையவரா...
மற்றவரின் துயரை கண்டு பொறுக்க முடியாதவரா....
இக்கட்டான நேரத்திற்கு உதவாத பணம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று எடுத்து கொடுப்பவரா....
உங்கள் கருணை உள்ளத்திருக்கு என் பணிவான வணக்கம். ஒரு கை கொடுப்பது மறு கைக்கு தெரியக் கூடாது என்று நினைத்தால், தானம் தர்மம் என்கிற மாதிரி உதவிகள் அமைந்தால் இந்த கட்டுரை பொருந்தாது.
கொடுப்பது கடன். அவர் திருப்பி தர வேண்டும் என்ற நோக்கில் உதவிகள் அமைந்தால் ஒரு நிமிடம் இதை படியுங்கோ.
சாஸ்த்திரத்தில் கடன் கொடுக்க கூடாத நாளாக 12 நாட்களை சொல்கிறது. அதாவது திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் இந்த நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாளில் கடன் கொடுத்தால், கொடுத்த கடன் உடன் வராதாம்.
இருந்தாலும் இதில் மோசமான நட்சத்திரம் எது தெரியுமா?
சுவாதி.
சுவாதியில் கொடுத்தால் சுவாகா என்பார்...
காரணம் என்ன?
சுவாதி என்பது ராகுவின் நட்சத்திரம். ராகுவின் குணம் என்ன?
பொய், புளுகு, பித்தலாட்டம், மோசடிக்கு துணை போகிற கிரகம். நம்ப வைத்து கழுத்தை அறுக்கிற கிரகம். அவருடைய இந்த நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராது. செய்கிற உதவிகள் கூட உடனே மறந்து போவார்கள். அதனால் மற்றவருக்கு உதவி செய்வதாக இருந்தால் சுவாதி நட்சத்திரம் உள்ள நாளில் மட்டும் கொடுக்கவே வேண்டாம்.
No comments:
Post a Comment