Saturday, May 9, 2015

உணவு உண்டால் பாவம்?

உணவு உண்டால் பாவம்?
 
ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு முறை பாண்டவர்களின் தூதுவனாக துரியோதனின் அரண்மனைக்குச் சென்றார். அப்போது துரியோதனன், ‘‘கிருஷ்ணா! உனக்காகப் பிரமாதமான விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். அதனால் இங்கேயே உணவு உட்கொள்ள வேண்டும்!’’ என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு பகவான், ‘‘துரியோதனா! என் மேல் பக்தி கொண்டு அன்பு செலுத்தும் பாண்டவர்களையும் என்னையும் துவேஷித்த நீ தரும் உணவை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. மட்டுமின்றி, நீ தர்மம் தவறி நடந்து, பெரியோர்களை அவமதிப்பவன். அதர்மமான வழியில் நடக்கும் நீ அளிக்கும் அன்னத்தை நான் ஏற்க முடியாது. மூன்றாவதாக, நான் இப்போது பாண்டவர்களின் தூதுவன். ஒரு தூதுவன், தான் வந்த காரியத்தை முதலில் கவனிக்க வேண்டும். அதன் பிறகே விருந்து, வைபவம், கேளிக்கை எல்லாம். அதனால், நான் வந்த காரியம் முடியுமுன் நீ அளிக்கும் இந்த விருந்தை ஏற்க முடியாது!’’ என்று கூறினார்.
இங்கு சில தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன அவற்றை முறையாக நாம் பின்பற்ற வேண்டும்.
‘அதர்மமான வழியில் நடக்கும் ஒருவன் அளித்த உணவைப் புசித்தால், அவனது பாவங்களில் பாதி, உணவு உண்பவரைச் சேரும்’ என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே, எப்போது, எங்கு, எவர், எப்படிக் கொடுத்தாலும் சாப்பிடுவது என்பதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment