Saturday, June 13, 2015

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்

1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்
மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோட்சம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்றவர். வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர். அவரை வணங்குகிறேன்.
2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்
வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.
3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்
கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் ÷க்ஷமத்தைச் செய்தவர் விநாயகர். மேலும் அவர் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நல் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.
4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்
ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்த மகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். பாம்பை ஆபரணமாகக் கொண்டவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.
5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்
மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.
6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.
இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாரோ, அவன் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும், நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்

2 comments:

  1. இந்த இனிய காலை வேளையில் தங்களது வலைப்பூவிற்கு வந்து, மஹாகணேச பஞ்சரத்ன சுலோகங்களை படிக்க, முகனூலில் பகிர வாய்ப்புக் கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.!

    ReplyDelete
  2. I am singing this MUDHA KARAATHA MOTHAGAM composed by ADHI SANKARA in five different Raaghas and with due courtesy, acknowledgement and thanks to your goodself, posting your translation in Tamil in my blog.
    Hope U will permit me to post your translation
    subbu thatha.
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete