ஸ்படிக மாலை அணியும் விதம்
ஸ்படிக மாலை அணிவதில் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்படிக மாலையை ஒருநாள் முழுவதும் கன்று ஈன்ற பசுவின் சாணத்தில் மூழ்க வைத்திருந்து, பிறகு தண்ணீர், பால் போன்றவற்றால் சுத்தம் செய்து தகுந்த ஒரு குருவின் மூலம் அணிய வேண்டும். தங்களுக்கென்று குரு இல்லாதவர்கள், கோயிலில் அனுபவம் வாய்ந்த குருக்களிடம் (அர்ச்சகர்) மூலமாக தெய்வ சன்னிதானத்தில் அணிய வேண்டும். இதனால் கிரகங்கள் மூலமாக ஏற்படும் இன்னல்கள் விலகும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் பௌர்ணமி அன்று இம்மாலையை அணிவதால் உடலில் சக்தி கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது
No comments:
Post a Comment