நிர்வாணம் என்ற வார்த்தையை ஞானிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கச் கூச்சமாக இருக்கிறதே…? ‘நிர்வாணம்’ பற்றி ஜக்கி வாசுதேவ் சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார் என்று பார்போம்:
நிர்வாணம் என்றால், அம்மணம் என்று நீங்கள் அர்த்தம் கற்பித்துக் கொண்டதால் வந்த குழப்பம் இது.
சமாதி நிலையைக் குறிக்கும் மிகப் பொருத்தமான வார்த்தை அது. நிர்வாணம் என்றால், இல்லாதிருப்பது. அதுதான் ஒவ்வொரு ஆன்மீகத் தேடலின் இலக்கு.
சமாதி என்றால்?
‘சமா’ என்றால் அமைதி, வேறுபாடுகளற்ற நிலை, சாந்தம் என்று பல அர்த்தங்கள் சொல்லலாம். ‘தி’ என்பது புத்தியைக் குறிக்கிறது.
ஒரு கல்லை உடைக்க விரும்புகிறீர்கள். இது கல், இது கை என்று பிரித்துப் பார்க்கத் தெரியாவிட்டால், உங்கள் விரலை உடைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மனநலம் குன்றி இருப்பவர்கள் தங்கள் உணவை வாய்க்கு எடுத்துப் போவதற்குக் கூடக் கஷ்டப்படுவது எதனால்? வாய் எது, கை எது, உணவு எது என்று பகுத்து அறிய இயலாததால்தான்!
எனவே, பகுத்துப் பார்த்துப் பிழைத்திருக்க புத்தி தேவைப்படுகிறது.
ஆனால், மதங்கள் என்ன சொல்கின்றன? இது வேறு, அது வேறு அல்ல. எல்லாம் ஒன்றே! அதுவே கடவுள் என்கின்றன. எல்லாம் ஒரே சக்திதான் என்று விஞ்ஞானமும் அடித்துச் சொல்கிறது.
எல்லாம் ஒன்றே என்று வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு இருப்பதோடு நிற்காமல், அதை அனுபவபூர்வமாக உணர முற்படுவதே ஆன்மீகத் தேடல்!
No comments:
Post a Comment