Friday, July 31, 2015

அன்னையும் ஆசாரியரும்.

அன்னையும் ஆசாரியரும்.. {இதை முழுவதும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது}
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோர் கூற்றில் முதன்முதலாகப் போற்றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாதுகாத்து வருவதில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவனாயினும் தாய் தன் அன்பினால் அவனைத் திருத்த முயல்வாளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் தீங்கு எண்ணமாட்டாள். இதுவே தேவ்யபராத - க்ஷமாபனஸ்துதியில் -
(குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி)
என்றவாறு தாயின் மேன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக உலகில் ஒருவன் அல்லலுறும்போது அன்னையை நினைந்து அவளுடைய ஆறுதலை எதிர்பார்ப்பது இயல்பு என்று பாஸ்கரராயர் என்ற உரையாசிரியர் தமது லலிதா ஸஹஸ்ரநாம உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புவியிலுள்ள அன்னையர் தமது மக்களின் துயர்துடைத்து ஆறுதலளிப்பார்களேயன்றி ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் மற்றும் ஆத்யாத்மிகமெனும் மூன்றுவித தாபங்களைப் போக்க அவர்களால் இயலாது. அவ்விதமான மூன்று தாபங்களையும் போக்கவல்லது ஜகன்மாதாவான அம்பிகையின் அருளே என்று திண்ணமாக உரைக்கிறார் -
(அநுபூதாஸ்து மாதரோ ந தாபத்ரய ஹரண-ஸமர்த்தா:
அதோ துரந்த துஃக்க ஹரணக்ஷமாஸு ஸர்வோத்தமா ஜகன்மாதா ஏவ
ஸ்வஸ்மின் தயாவத்வாபாதனாய மாத்ருத்வேன ஸ்தோதவ்யா)
ஆகவே பிறப்பு இறப்பு என்று மாறி மாறி உழலும் சக்கரத்திலிருந்து முழுமையாக விடுபட ஜகன்மாதாவின் திருவடிகளை உறுதியாகப் பற்றுவதேயன்றி வேறோர் உபாயமுமில்லை. ஜகன்மாதாவான அம்பிகையானவள் தன்னைத் துதிப்போர்களை, துதித்த மாத்திரத்தில் அவர்களுக்கு தன்னுடன் இரண்டறக் கலக்கும் மேலான நிலையை - ஸாயுஜ்யத்தை - அருள்வாள் என்று பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரீயின் 22ஆவது சுலோகத்தில் கூறுகிறார் -
(ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்)
என்று ஆசார்யர், ஜீவாத்மாவானது பரமாத்மாவான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை நிலை நாட்டியிருப்பினும் அந்தப் பரமாத்ம ஸ்வரூபத்தை உணர்வதற்கு ஸகுணப்ரஹ்ம உபாஸனை வழிவகுக்கும் என்றும், அதற்கு பக்தி ஓர் இன்றியமையாத ஸாமக்ரீயென்று விவேகசூடாமணியில் னீணீமீ]sணீஜ்ஸீ sணீனீ¢(ணீனீ! தூவீடுக்ஷீமீஸ் ரீக்ஷீமிஹ்sமி (மோக்ஷஸாதனஸாமக்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) என்று சொல்லப் பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார். இவ்விதம் சுத்த சைதன்யஸ்வரூபமான நிர்குணப்ரஹ்மணை உணர ஸகுணப்ரஹ்மஸ்வரூபமாக தமக்கு உகந்த இறைவடிவங்களைத் துதிக்கிறார். பாவனோபனிஷத்தில்
(நிருபாதிக ஸம்விதேவ காமேச்வர:, ஸதானந்தபூர்ண: ஸ்வாத்மைவ பரதேவதா லலிதா)
என்று உபாதியற்ற சுத்தசைதன்யமே ஸம்வித் வடிவான காமேச்வரன், எப்பொழுதும் ஆனந்தம் நிறைந்து பரிபூர்ணமாயிருக்கின்ற தன்னுடைய ஆத்மசைதன்யத்தின் ஓர் அம்சமே பரதேவதையென்னும் லலிதாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் மற்றும் ஸௌரம் என்ற ஆறு மதங்களை ஸ்தாபித்து அந்த தெய்வங்களுக்கான துதிகள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அந்த ஸ்தோத்ரப் படைப்புகளில் அம்பிகையைக் குறித்ததான சிலவற்றில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை இங்கு காண்போம். பகவத்பாதரின் தேவீ ஸ்தோத்ரங்களில் முதன்மையாகத் திகழ்வது ஸௌந்தர்யலஹரீயாகும். 103 சுலோகங்களைக் கொண்ட இந்த அரிய படைப்பு முதல் 41 சுலோகங்களுடன் ஆனந்தலஹரீ யெனும் பெயரில் முதல் பாகமாகவும், எஞ்சியிருக்கும் பாகம் ஸௌந்தர்யலஹரீ என்ற பெயரில் இரண்டாவது பாகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளதை உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அருணா மோதினீ உரையாசிரியரான காமேச்வர ஸூரி அல்லது காமதேவ கவி தம் உரையில் -
(வஸ்துதஸ்து அத்ர ஆனந்தலஹரீ ஸௌந்தர்யலஹரீ இதி வ்யவஹாரேண)
என்ற மரபைக் குறிப்பிடுகிறார். இதே கருத்தை டிண்டிம உரையாசிரியரான இராமகவியும், கோபாலஸுந்தரீ, ஆனந்தலஹரீ உரையாசிரியர்களான கோபாலசுந்தரரும், கௌரீகாந்தபட்டரும் குறிப்பிடுகின்றனர். மேலும் முதல் பகுதியில் காணும் 41 சுலோகங்கள் மந்த்ர சாஸ்த்ரத்தை விவரிப்பதாகவும் இரண்டாம் பகுதி அம்பிகையின் எழிலை வர்ணிப்பதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய மேன்மையான ஸ்தோத்ரத்தை தம் அடியவர்களின் மேன்மைக்காக சிவபெருமானின் அவதாரமான பகவத்பாதர் அருளியுள்ளாரென்று ஆனந்தகிரி என்ற உரையாசிரியரும் தெரிவிக்கிறார். அருணாமோதினீ உரையாசிரியர் இந்த ஸ்தோத்ர காவ்யத்தின் சிறப்பை suஜ்ணீவீsழிஜ்ணீமீனீஸிஙீஹ்மீ (ஸுதாஸிந்தோர் மத்யே) என்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் - பகவத்பாதர் இந்த ஸௌந்தர்யலஹரீ ஸ்தோத்ரத்தை எடுத்துக் கொண்டு கயிலாயத்திற்குச் சென்றபோது அங்கு ஏற்கெனவே அத்துதியைப் பாடக்கேட்டு, தம் இதயத்தில் இத்துதியைத் தோற்றுவித்து அருள்புரிந்தவர் கயிலாயத்தில் உள்ள உமாமஹேச்வர தம்பதியே என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
(பகவத்பாதா: ஸ்தோத்ரமேதத் விதாய கைலாஸம் கத்வா தத்ர ஏதாமேவ
ஸ்துதிம் பார்வதீ பரமேச்வர ஸமீபே பட்யமானாம் த்ருஷ்டவந்த: இதி ப்ரஸித்தி:)
ஸ்தோத்ரம் அல்லது வழிபாடு தமது மனத்துக்குகந்த கடவுளைக் குறித்த புறவழிபாடாக அமைவது அனைவராலும் இயன்ற ஓர் எளியமுறை. ஆனால் அதையே உட்புற வழிபாடாக தம் இதயத்தின் தஹராகாசத்தில் அமைந்திருக்கும் ஜ்யோதிஸ்வரூபத்தைக் குறித்ததாக அமையும் போது அது புலன்களைக் கட்டுப்படுத்திய துறவிகளால் மட்டுமே இயலும். இதுவே ஸமயாசாரமென்று அழைக்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில்(ஸமயாசார தத்பரா) என்ற பெயருக்கான உரையில் பாஸ்கரராயர் இவ்வாறு விளக்குகிறார் -
(தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி
ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:)
இதயத்தின் தஹராகாசத்தில் ஸ்ரீசக்ரத்தைப் பாவித்து அதற்குச் செய்யப்படும் பூஜையே ஸமயாசாரம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார், பாஸ்கரராயர். இவ்வகையான ஸமயாசார முறையையொட்டியே ஸௌந்தர்யலஹரீ அமைந்ததாகவும் லக்ஷ்மீதரர் தம் உரையில் குறிப்பிட்டு பகவத்பாதரின் ஸமயாசார முறையில் ஆழ்ந்த புலமையையும் விவரித்துக் கூறியுள்ளார் -
(பகவத் பாதாசார்யா: ஸமயமத பாரத்ருச்வான: ஸமயாசாரப்ரவீணா: ஸமயரூபாம் பகவதீம் -
ஸ்துவந்தி ஸமயாசாரோ நாம ஆந்தரபூஜாரதி: குலாசாரோ நாம பாஹ்யபூஜாரதி: இதி ரஹஸ்யம்)
என்றும், மேலும் இதையே விவரிக்கும் போது பாஹ்யபூஜா என்னும் புறவழிபாட்டில் பூர்ஜபத்ரம் அல்லது துணி அல்லது தங்கம் அல்லது வெள்ளியாலான தகட்டில் சக்ரவடிவம் எழுதி வழிபடுவது. இதையே ஆன்றோர் கௌல பூஜையென்று அழைப்பதாகவும் கூறுகிறார் -
(பாஹ்யாகாசஜம் நாம பாஹ்யாவகாசே பீடாதௌ பூர்ஜ பத்ர சுத்த பட ஹேம
ரஜதாதி பட்டதலே லிகித்வா ஸமாராதனம் ஏததேவ கௌல பூஜேத்யாஹு: வ்ருத்தா:)
பகவத்பாதர்களும் புறவழிபாட்டினும் மேலான உட்புறமான ஆறு சக்ரங்களின் வழிபாட்டின் வாயிலாக தஹராகாசத்தில் தேவியை உபாஸிப்பதையே உணர்த்துகிறார். ஆத்மானு ஸந்தானமெனப்படும் சிவ-சக்தி வேறுபாடற்ற சுத்த சித்சக்தியான அம்பிகையை துதியின் மூலம் வர்ணிப்பதற்காகவே பகவத்பாதர் மந்த்ரங்களைக் குறிப்பிடுகிறாரென்று ஸௌபாக்யவர்த்தனீ உரை யாசிரியரான கைவல்யாச்ரமியும் தெரிவிக்கிறார் -
சிவ-சக்த்யோ: அபேதம் ஞாபயிதும் ஸகல ப்ரபஞ்ச ஸாக்ஷிண்யா: ப்ரஹ்ம –
அவினாபூத சித்-சக்தே: ஸ்துதித்வாரா மாத்ருகாதி மந்த்ரான் உத்தரதி
இதையே பாவனோபனிஷத் உணர்த்துவதாக முன்னர் குறிப்பிடப்பட்டது.
அம்பிகையை வழிபடவும் ஒருவர் ஈட்டிய நற்பலன்களே வழிவகுக்கும் என்பதை ஆசார்யர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஸௌந்தர்யலஹரியில் காணும் சுலோகங்களை விளக்கும் பொழுது உரையாசிரியர்களனைவரும் ஆசார்யரின் உத்திகளில் காணும் பொருட்செறிவையும். அவரது ஆழ்ந்த புலமையையும் போற்றியுள்ளனர். ஒவ்வொரு சுலோகத்தின் உரையிலும் சாக்த விஷயமானதும், பீஜமந்த்ரங்களைக் குறித்ததுமான பல சீறிய குறிப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டாம் சுலோகத்தில் காணும் tஸீமிஹ்ணீ
(சரணா: சத்வார: - சுக்ல-ரக்த-மிச்ர-நிர்வாணா: தேஷாம் த்யான ஸ்தானானி - சுக்ல-ரக்தயோ: ஆக்ஞாசக்ரம் த்விதலம் மிச்ரஸ்ய ஹ்ருத்கமலம் நிர்வாணஸ்ய ஸஹஸ்ரதலம் த்வாதசாந்தம் சுக்லரக்தயோ: ப்ரஹ்ம-விஷ்ணூ த்யேயௌ மிச்ரே ருத்ர: நிர்வாணே ஸாக்ஷாத் பரமானந்த நிர்பர: ஸதாசிவரூப:)
என்று வர்ணித்து ப்ரஹ்மா அம்பிகையின் ரக்தவர்ணமான திருவடித்தாமரையின் துகளைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார்; விஷ்ணு வெண்மையான துகளைக் கொண்டு காத்தலையும், ஹரன் மிச்ரமான துகளைக் கொண்டு அழித்தலையும் புரிகின்றனரென்று சாக்த ஸம்ப்ரதாயத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.
அடுத்ததாக ஸுதாஸிந்தோர் மத்யே என்று தொடங்கும் 8ஆவது சுலோக உரையில் டிண்டிம உரையாசிரியர், தியானம், 64 உபசாரங்களுடனான பூஜை மற்றும் மந்த்ரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்காங்கே ஆகம ரஹஸ்யங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர் உரையாசிரியர்கள். மேலும் (ஸுதா ஸிந்தோர் மத்யே) என்று தொடங்கு (குல குண்டே குஹரிணி) என்று முடியும் 10ஆம் சுலோகம் வரையிலான மூன்று சுலோகங்களில் குண்டலினியின் ஸ்வரூபம் வர்ணிக்கப்பட்டு துதிக்கப்படுகிறது. (சதுர்பி: ஸ்ரீகண்டை:) யென்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் ஸ்ரீசக்ரம் அதை எழுதும் முறை ஆகிய விளக்கப்பட்டுள்ளன. (முகம் பிந்தும் க்ருத்வா) என்ற சுலோகத்தின் மூலம் ஆசார்யர் அர்த்தநாரீச்வர த்யானத்தை வர்ணித்து அதன் பலனையும் குறிப்பிடுகிறார். இங்கு பெரும்பாலான உரையாசிரியர்கள் 'க்லீம்' என்ற காமபீஜத்திலுள்ள உயிரெழுத்தாகிய 'ஈம்' என்ற எழுத்தின் வடிவத்தைக் குறிப்பிட்டு வேத மந்த்ரமான யஸ்தித்யாஜ ஸசிவிதம் என்று தொடங்கும் ரிக்வேத மற்றும் தைத்திரீய ஆரண்யகத்தில் இடம் பெறும் மந்திரத்தை மேற்கோளாகக் காண்பித்து பகவத்பாதரின் கருத்தை விளக்குகின்றனர். குறிப்பாக டிண்டிம உரையாசிரியரான இராமகவி சாரதா இலிபியெனும் காச்மீரதேசத்து எழுத்துகளில் 'ஈம்' என்ற எழுத்தின் வடிவம் ஸ்த்ரீரூபமாகப் புலப்படும் என்று விளக்குகிறார் -
(அத்ர லகார ககார வர்ஜனேன நிஷ்க்ருஷ்ட ரூப மன்மத பீஜம் ஸா ஏவ மஹாவித்யா
தஸ்யா சாரதாலிபிப்ரகாரேண லேகனேன ஸ்த்ரீரூபம் ஸம்பவதி முகம் பிந்துதயா
பாதி தத் அதஸ்தாத் த்வி பிந்துகம் குசத்வயம் ததா ஞேயம் அதஸ்தாத் த்ரிகோணகம்
ஏவமீகாரம் ஸ்யாத் ஏவம் காமகலா பரா)
முன்னர் குறிப்பிட்டவாறு ஸௌந்தர்யலஹரீயின் முதல் பகுதியில் காணப்படும் சுலோகங்கள் பெரும்பாலும் மந்த்ரகர்பமாக - அதாவது மூலமந்த்ரங்களை மையமாகக் கொண்டு வர்ணிக்கப்படுவதாக இருப்பினும் பாமரமக்களின் நலன் கருதி எளிய முறையில் கடைப்பிடிக்கப்படும் நாமோச்சாரணத்தின் மகிமையையும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். ராமகவி இக்கருத்தை தமது 22-ஆவது சுலோகத்திற்கான உரையில் விளக்குகிறார். “ஆகமங்களில் கூறப்பட்டுள்ள அந்தர்யாக முறைகள் கவனமிக்க மனநிலை கொண்டவர்களால் மட்டுமே பின்பற்ற இயலும். ஒவ்வொரு கணத்திலும் உலக வாழ்க்கையின் ஜ்வரத்தால் அல்லது தாபத்தால் மிகவும் அல்லல்பட்டு பக்தியொன்றை மட்டுமே ஸாதனமாகக் கொண்டு ஏதேனும் ஒரு தேவீஸ்தோத்ரத்தால் அம்பிகையைக் காண விழைவோர்க்கு உகந்த உபாயமிது”. “பவனாகிய சிவனின் துணைவியே! உன்னை வழிபடுகின்ற அடியவன் மீது கருணை நிரம்பிய பார்வையைச் செலுத்துவாய்!” எனச் சொல்லத் தொடங்கியதுமே 'பவானி த்வம்' என்ற இரு பதங்கள் முன் வந்தன. உடனே நீ அந்த அடியவனுக்கு முகுந்தனும், பிரம்மனும் இந்திரனும் தன் கிரீட ஒளிகளால் தீபாராதனை செய்கிற தனது நேரிடைக் காட்சியையளித்துத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறாய்' என்று உரைத்து -(ஸாலோக்ய ஸாமீப்ய - ஸாரூப்ய - ஸாயுஜ்ய) போன்ற நான்கு உன்னதமான நிலைகளையும் அழகாக விளக்குகிறார். இந்த சுலோகத்தின் மற்றொரு சிறப்பு அத்வைதக் கோட்பாடுகளுக்கு அடிப்படையான மஹாவாக்யமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதையும் விளக்குவதாக அமைந்ததுவே. வ்யாகரண ரீதியில் விளக்குங்கால் “அஹம் த்வம் பவானி” என்ற 'லோட்' உத்தமபுருஷ ஏகவசனப்ரயோகத்தால் “நான் நீயாவேன்” என்பதாகவும் பொருள் அமையும். லக்ஷ்மீதரர் இந்த சுலோகத்தின் உரையில்-
(பவானி இதி பதஸ்ய லோட் உத்தமபுருஷ ஏகவசானந்தத்வம் அவகம்ய தத்ஸாமா
மஹாவாக்ய ப்ரயோகோ அனேன ஸாதகேன னாதிகரண்யேன த்வம்பதஸ்ய அன்வயே
ப்ரயுக்த இதி மத்வா மஹாவாக்யபலம் தாதாத்ம்யம் திசதி பவதீ)
என்று குறிப்பிடுகிறார். இதுபோல் தாதாத்ம்யம் வேண்டி தியானிப்போரின் பலனை “ஸ்வதேஹோத் பூதாபி: க்ருணிபி:” என்று தொடங்கும் சுலோகத்திலும் பகவத்பாதர் வர்ணித்துள்ளார். இவ்விதமாக ஒவ்வொரு சுலோகத்தின் பொருட்செறிவும் கருத்தாழமும் உரையாசிரியர்கள் மிகவும் அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஸ்ரீசக்ரத்தை வர்ணித்தது போல் பகவத்பாதர் ஆறு சக்ரங்களையும் வர்ணிக்கும் பொழுது ஆசார்யர் அவரோஹக்ரமமான ஆக்ஞாசக்ரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான வர்ணனை அருளியுள்ளார். சுலோகம் 36-ஆவது முதல் 41-ஆவது சுலோகம் வரை ஆறு சக்ரங்களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்கு 41-ஆவது சுலோக உரையில் லக்ஷ்மீதரர் ஸமய மார்கத்தையும் அதைப் பின்பற்றுவோரையும் விளக்கிவிட்டு பகவத்பாதர் இந்த ஸ்தோத்ரத்தில் மூலாதாரத்திலிருந்து தொடங்காமல் மாறாக ஆக்ஞாசக்ரத்திலிருந்து அவரோஹக்ரமமாக வர்ணித்ததன் நோக்கம் வேதங்களின் வசனத்தை அனுஸரித்ததுவே என்று குறிப்பிடுகிறார் -
(அத்ர பகவத்பாதை: ஆதாரகமலாதிக்ரமம் விஹாய
ஆக்ஞாசக்ராதிக்ரமேண அவரோஹக்ரமேண பூஜாப்ரகார: கதித:
அயமாசய: - ஆத்மன: ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ
இதி ச்ரௌதக்ரமமவலம்ப்ய அவரோஹக்ரம: உக்த:)
இங்கு கௌல மார்க்கத்தையும், திகம்பர, க்ஷபணகர்களின் உபாஸனா முறைகளைக் குறிப்பிட்டுச், சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. ஆனால் அவையனைத்தும் வேதமார்க்கத்திற்குப் புறம்பானதால் நினைத்துப் பார்க்கவும் உகந்ததல்ல என்றும் கூறுகிறார் -
(அத்ர பஹு வக்தவ்யமஸ்தி: தத்து அவைதிகமார்கத்வாத் ஸ்மரணார்ஹம் அபி ந பவதி)
ஸௌந்தர்யலஹரீயின் இரண்டாவது பாகமான 42 -முதல் 103 வரையிலான 62 சுலோகங்களில் அம்பிகையின் ஸௌந்தர்யம் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ பரிவ்ராஜகரான ஆசார்யர் முற்றிலும் அனைத்தையும் துறந்தவர். அவர் ஏன் பவானியின் அழகை வர்ணிக்க முனைந்தார் என்று பூர்வபக்ஷமாகக் கேள்வியெழுப்பிய பதார்த்த சந்த்ரிகா உரையாசிரியர் அதற்கு இவ்வாறு பதிலுமளிக்கிறார் - பவானீ ப்ரஹ்மவடிவினள். ப்ரஹ்மத்தை உருவகப்படுத்துவதே பவானியின் வர்ணனை என்று -
(பவான்யா ப்ரஹ்மரூபத்வேன ப்ரஹ்மஸ்வரூப வர்ணனமேவ
பவானீ வர்ணனம் இதி ந அநௌசித்யம்)
சித்சக்தியாக அனைத்திலும் பரவிநிற்பவள் இவளேயென்று மார்க்கண்டேய, புராணமும் வர்ணிக்கிறது.
(சிதிரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்)
பகவத் பாதர் அருளிய தேவீஸ்தோத்ரங்களில் பவானீபுஜங்க ஸ்தோத்ரத்தில் பதினாறு சுலோகங்களும் ஸௌந்தர்யலஹரீயில் காணப்படும் கருத்துகளுக்கு ஒப்பானதாகவே பெரும்பாலும் உள்ளன. பகவத்பாத ஸ்தோத்ர ரத்னாவளி என்ற தலைப்பில் வெளியான நூலில் ஸ்ரீலலிதா பஞ்ச ரத்னம், கௌரீதசகம், ஸ்ரீத்ரிபுரஸுந்தர் - யஷ்டகம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம் பவானீ புஜங்கம், கல்யாணவ்ருஷ்டிஸ்தவம், மற்றும் ஆனந்தலஹரீ ஸ்தவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவ மெனும் ஸ்தோத்ரத்தில் பீஜாக்ஷரங்களான க,ஏ,ஈ,ல, ஹ்ரீம்;, ஹ,ஸ,க,ஹ,ல,ஹ்ரீம்; ஸ,க,ல, ஹ்ரீம் என்ற எழுத்துகளில் தொடங்கி அவற்றை மாலையாக அம்பிகைக்கு அர்ப்பணித்துள்ளார். இங்கு காணப்படும் 'ஹ்ரீம்' என்ற பீஜாக்ஷரத்திற்கு இருக்கும் சிறப்பை ஆசார்யரின் துதிகளில் பல இடங்களில் அறியலாம். இங்கு 15-ஆவது சுலோகத்தில் - (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மனுனா) என்று குறிப்பிடுவதற்கேற்ப அவரது கல்யாணவ்ருஷ்டி ஸ்தவத்திலும் தெளிவாகக் கூறுகிறார் -
(ஹ்ரீங்காரமேவ தவ நாம க்ருணந்தி வேதா:) (சு:5), என்றும்,
(ஹ்ரீம் - ஹ்ரீமிதி ப்ரதிதினம் ஜபதாம்) (சு:11), என்றும்,
(ஹ்ரீங்காரமேவ தவ நாம ததேவ ரூபம்) (சு:14), என்றும், வர்ணித்து இறுதியாக பலச்ருதியில்,
(ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம் ஸ்தோத்ரம் ய: ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேன் மந்த்ரவித் தஸ்ய க்ஷோணி புஜோ பவந்தி வசகா லக்ஷ்மீ சிர: ஸ்தாயினீ வாணீ நிர்மலஸூக்தி பார பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் வய:)
“ஹ்ரீங்காரத்தை மூன்று முறை ஸம்புடீகரணம் செய்வதாக அமைந்த இத்துதியை அன்னையே! எவனொருவன் உனது முன்னிலையில் ஒவ்வொருநாளும் ஜபிப்பானோ அவனுக்கு அரசர்களும் கட்டுப்பட்டு, நிலையான செல்வம், குறையேதுமில்லாத தெளிவான சொல்வன்மை, மற்றும் நீண்ட ஆயுள் ஆகியவை கிடைக்கப்பெறும்” என்று உணர்த்துகிறார். மேலும் இதே துதியில் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவது மிகுந்த பலனை அளிக்கும் என்பதை -
(ஸர்வக்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே தேவி த்வதங்க்ரி ஸரஸீருஹயோ: ப்ரணாம:)
என்றும் வர்ணிக்கிறார். “இறைவன் என்று ப்ரஹ்மா முதலானோரிருப்பினும் அவர்களனைவரும் ப்ரளயகாலத்தில் மறைந்து போவார்கள். அன்னையே! எவனொருவன் உனது திருவடிகளில் ஒருமுறை பணிந்து வணங்குவானோ அவன் ஒருவனே நிலையாக இருப்பான்” என்றும் “உன்னைக் குறித்து செய்யும் வழிபாட்டில் உனது மேன்மையான வடிவங்கண்டு எனது கண்களில் நீர்மல்கி களிப்படையவேண்டும் என்பதே நான் விரும்புவது” என்றும் பிரார்த்திக்கிறார்.
(ஏதாவதேவ ஜனனி ஸ்ப்ருஹணீயமாஸ்தே த்வத்வந்தனேஷு ஸலில ஸ்தகிதே ச நேத்ரே
ஸான்னித்யம் உத்யதருணாயுத ஸோதரஸ்ய த்வத்விக்ரஹஸ்ய பரயா ஸுதயாப்லுதஸ்ய) (சு:2)
இவ்விதம் ஸ்ரீசிவனின் அவதாரமாகப் போற்றப்பட்ட பகவத்பாதர் அடியவர்களின் நலன் கருதி அருளிய துதிகள் ஏராளம். சில துதிகள் அவர் பெயரில் காணப்படினும் அவற்றின் நடை மற்றும் பொருட்செறிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது அவை விலக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பீஜாக்ஷரங்களனைத்தும் தகுந்த குருவின் உபதேசத்தால் மட்டுமே முறையாகப் பயிலவேண்டும். ஸ்ரீவித்யாஉபாஸனையில் நன்கு தேர்ச்சிபெற்ற தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்ற பின்னர் பயில்வதன்மூலம் தக்க பலனைப் பெற இயலும். மந்த்ரகர்பமான பல துதிகள் ஸாதகனின் வினைப்பயன்களுக்கேற்ப அமையும். அம்பிகையைத் தொழுவதும் அவரவர்களின் நற்பலன்களால் மட்டுமே இயலும் என்பதையே பகவத்பாதர், (ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவதி) என்று குறிப்பிடுகிறார். பகவத்பாதர் போன்ற அவதாரபுருஷர்கள் தாம் ஆத்மஸாக்ஷாத்காரமெனும் முக்திபெற்று, தம் ஆனந்தானுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் உலகத்தோர் உய்யத் துணை புரிவார்கள் என்று அவரது விவேக சூடாமணியின் வசனம் மூலம் அறியலாம் -
(சாந்தா மஹாந்தா நிவஸந்தி ஸந்த: வஸந்தவல்லோகஹிதம் சரந்த:
தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனான் அஹேதுனா அன்யானபி தாரயந்த:) (சு:39)
மஹான்கள் சாந்தஸ்வரூபத்துடன் அனைவருக்கும் வஸந்தருதுபோல் நன்மை புரிந்து பயங்கரமான பிறவிப் பெருங்கடலைக் கடந்து ஏனையோரையும் எந்தவொரு பலனையும் கருதாது பிறவிப் பெருங்கடலைக் கடக்கவைப்பார்கள்.
பித்ரு சாபம்...பித்ருக்கள் அப்படியென்ன தன்மை இல்லாதவர்களா? க்ரூரமானவர்களா?
("வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
கேள்வி : நமது பித்ருக்கள் சாபமிட வாய்ப்புண்டு என்கின்றார்களே, பித்ருக்கள் அப்படியென்ன தன்மை இல்லாதவர்களா? க்ரூரமானவர்களா?
பதில் : அது அப்படி அல்ல. பித்ருக்கள் க்ருரமானவர்கள் அல்ல.சற்று விவரமாக ப்ர்ப்போம்.
ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். அதில் சந்தேகமே வேண்டாம். சாஸ்திரிகளை குறை சொல்வதும், சாக்குப் போக்குகளைத் தேடி கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதை கைவிட வேண்டும். யாரிடம்தான் குறை இல்லை. ச்ராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.
ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் வருங்காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக் கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ரு சாபத்திற்கு ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.
பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று கேட்டால், அவர்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு ச்ரமங்கள் ஏற்படலாம்.
யாருக்கெல்லாம் திருப்தி? ச்ராத்தம் செய்வதினால்
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்,
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வேதேவர்கள் என்ற தேவப்பிரிவினர்,
3. ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான்,
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்,
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்
களுக்கும்,
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்,
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
பித்ருக்களின் அனுக்ரஹம்
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள், இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ச்ராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தின் பொருள் 1

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தின் பொருள் 1
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||
இதன் பொருள் வருமாறு;
அருணாம்: உதிக்கின்ற சூரியன்
கருணா: கருணை
தரங்கிதாக்ஷீம் - கண்களில் இருந்து வெளிப்படும் அலைகள், கருணை அலைகளை அள்ளி வீசும் கண்களையுடையவள் தேவி.
த்ருத - ஆதரவு
பாஷா - பாசக்கயிறு
அங்குஷ - அங்குசம்
புஷ்ப - மலர்
பாண - அம்புகளை (மலர்களை அம்புகளாக கொண்டவள்)
சாபாம் - வில்
அணிமாதிபி ராவ்ருதாம் - அணிமா, மகிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்யா, ஈசத்வ, வசித்வ சித்திகளை சூழ உள்ளவள்.
மயூகை - ஒளிக்கற்றை
அஹ - நான்
மித்யேவ - விரும்பும்
விபாவயே - பேரின்பம்
பவாநீம் - பவானி, லலிதா சஹஸ்ர நாமத்தில் 112 வது நாமம்.
இந்த ஸ்லோகத்தின் பொருள் வருமாறு: நான் பவானியை தியானிக்கிறேன், உயர்ந்த பேரின்பவடிவானவள், உதிக்கின்ற சூரியனின் நிறத்தை ஒத்த, இது முன்னைய ஸ்லோகத்தில் அவளது சிவப்பு நிறத்தினை உறுதி செய்கிறது. அவளது கருணை அலைகளை வீசுகிறது. இந்த தியான ஸ்லோகத்தில் நான்கு கைகளை உடையவளாக கருதப்படுகிறது. பின்னிரு கைகளிலும் பாசமும் அங்குசத்தினை கொண்டிருக்கிறாள். முன்னிரு கைகளிலும் கரும்பு வில்லும் மலர் அம்புகளையும் கொண்டிருக்கிறாள். இந்த இந்த ஆயுதங்கள் பற்றிய விபரமான புரிதல்கள் சஹஸ்ர நாம உரையில் தரப்பட்டுள்ளன. இவை நான்கும் தேவியினுடைய நான்கு பிரதான உதவியாளர்களை குறிப்பன. அஷ்டமா சித்திகள் அவளைச் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த ஒவ்வொரு சித்தியும் ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படுகின்றன. நான் உயர்ந்த ஆனந்தமும் ஒளிக்கற்றை போன்ற உருவமும் உடைய பவானி என்ற ரூபத்தினை தியானிக்கிறேன்

Thursday, July 30, 2015

நெற்களை வேலியிட்டு காத்த சிவபெருமானைத் தெரியுமா ?

நெற்களை வேலியிட்டு காத்த சிவபெருமானைத் தெரியுமா ?
பாண்டியநாட்டை ராமபாண்டியன் ஆட்சி செய்து வரும் போது, வேணுவனம் (வேணு-மூங்கில்) வேதபட்டர் என்பவர் வேதங்களை கற்றுத்தேர்ந்து சிவதொண்டு புரிந்து வந்தார். தினமும் வீடுவீடாக சென்று நெல்லை சேகரித்து நைவேத்தியத்திற்கு பயன்படுத்தி வந்தார். வேதபட்டரின் பெருமையை உலகுக்கு அறிய வைக்க இறைவன் திருவுளம் கொண்டு அவருக்கு வறுமை அருளினார். ஒருநாள் தான் பெற்ற நெல்லை சன்னதி முன்னர் உலர வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை கொட்ட, நெல் நனைந்துவிடப் போகிறது என்று பதறியடித்து சன்னதிக்கு விரைந்தார். என்னே ஆச்சர்யம் ! நெல்லைச் சுற்றி அணை கட்டியது போல் நீர் நிற்க, வெயிலில் அந்த நெல் காய்ந்து கொண்டிருந்தது. இந்த அதிசயத்தை மன்னனிடம் சொல்ல, அவரும் விரைந்து வந்து பார்த்தார். இறைவனின் திருவருளை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார். அன்று முதல் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்ற திருநாமம் கிடைக்கப் பெற்றது. அந்த ஊர் திருநெல்வேலி என்று அழைக்கப்பட்டது. நெல்லுக்கு வேலியிட்டு இறைவன் காத்த இந்நிகழ்ச்சி, தைப்பூசத் திருவிழாவின் போது திருநெல்வேலியில் இன்றும் திருவிளையாடலாக நிகழ்கிறது.
முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றி வந்த ராமக்கோனார் என்பவர் ஒருவர் ஒருநாள் கல் இடறி பால் முழுவதும் அந்த கல்லில் மேல் விழுந்தது. இதே நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, இந்த விடயத்தை மன்னனிடம் தெரிவித்தார். மன்னனும் அந்த கல்லை கோடாரியால் அகற்ற முயல, அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அவர்கள் செய்வதறியாது அரண்டு நிற்க, அப்போது வானில் அசரீரி ஒலித்தது. தலையின் இடது பக்கத்தில் வெட்டுக்காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. இவரே இக்கோவிலின் மூலவர். இப்போதுள்ளது 21 ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் அறியப்படுகிறது.
பஞ்ச சபைகளில் திருநெல்வேலி தாமிரசபையாகும். சிவபெருமான் நடனமாடிய 5 தலங்களில் இதுவும் ஒன்று. பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 தலங்களில் இதுவும் ஒன்று. நெல்லையப்பர், காந்திமதி அம்மனாக அருள் பாலித்து வருகிறார். வாருங்கள். அருள் பெறுங்கள்.

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான ஆயுதம் படைக்கப்பட்டது ஏன்?

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான ஆயுதம் படைக்கப்பட்டது ஏன்?
இறைவனிடம் உள்ள இந்த ஆயுதங்கள், நாம் இவ்வுலகில் காணும் இரும்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட ஜடமான ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவை இறைவன் சம்பந்தத்தால் அபூர்வ சக்தியை உடையவை. தெய்வ வடிவானவை. இறைவனுக்கு உள்ள நிக்ரஹம் (தண்டித்தல்) அனுக்ரஹம் (அருள்புரிதல்) போன்ற இறை சத்தியானது அந்த இறைவன் கைகளில் தாங்கியுள்ள ஆயுதங்களுக்கும் உண்டு. முருகனின் கையிலுள்ள வேல் மட்டும் முருகனிடமிருந்து பிரிந்து தன்னந்தனியே சென்று மலைவடிவில் நின்றிருந்த அசுரனைப் பிளந்து சூரபத்மனின் தலையை அழித்தது.
சிவன் கையில் தாங்கியுள்ள சூலாயுதமே தனியாகச் சென்று தங்கம், வெள்ளி, செப்பு என மூன்று நகரங்களாக நின்றிருந்த திரிபுரன் என்னும் அசுரனை சம்கரித்தது. மகாவிஷ்ணு கையில் தாங்கியுள்ள சுதர்சனம் என்னும் சக்கரம், பக்தனான அம்பரீஷ மகாராஜாவை சிரமப்படுத்திய துர்வாச மகரிஷியை விரட்டிச் சென்று பாடம் புகட்டியது. இவ்வாறு எண்ணிப்பார்த்தால் ஒவ்வொரு இறைவனிடமும் உள்ள ஆயுதங்கள் இறைவன் செய்ய நினைக்கும் செயலை தாங்கள் மட்டும் தனியாகச் செய்து முடிக்கும் தனித்திறன் வாய்ந்தவை என்பது புலப்படும். ஆகவேதான், ஆயுதங்களுடன் சேர்த்து முருகன் போன்ற கடவுள்களை வழிபடுவதைப்போல், இறைவனிடம் உள்ள ஆயுதங்களை மட்டும் தனியாகப் பிரித்து வழிபடுவதும் உண்டு. முருகனிடமுள்ள வேலை மட்டும் தனியாக பாலாபிஷேகம் செய்து அர்ச்சித்து தோத்திரம் செய்து பூஜிப்பது முருகனை பூஜிப்பதைவிட அதிகமான பலனைத் தரும் என்பது அனுபூர்வ உண்மை.
மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை மட்டும் தனியே அமைத்து பூஜிப்பதும், சுதர்சன மந்திரங்களால் வழிபாடு செய்வதும் உண்டு. சரி; தத்வார்த்தமாக யோசித்தால், காலத்தின் சுழற்சியை உணர்த்தும் சக்கரத்தை காக்கும் கடவுளான திருமால் கொண்டிருக்கிறார். மனிதனை பிறக்கச் செய்யும் மும்மலங்களைப் போக்கும் மூவிலைச் சூலத்தை சிவபிரான் கொண்டிருக்கிறார். உடல் பலத்தோடு புத்தி பலமும் தேவை என்றுணர்த்த அனுமனுக்கு கதாயுதம்... இப்படிச் சொல்லலாம் தவிர, இறைவனிடமுள்ள ஆயுதங்கள் பக்தர்களைத் தீய சக்திகளின் பயத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே தவிர யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல.

சுவாசம் மூலம் நமக்கு நாமே பிராணாவை உற்பத்திச் செய்தல்

சுவாசம் மூலம் நமக்கு நாமே பிராணாவை உற்பத்திச் செய்தல்
சுவாச வகைகள்
எளிமையான சுவாசம்
பிராண சுவாசம்
யோகிகளின் சுவாசம்
சமன்படுத்தும் சுவாசம்
கேசரி முத்திரை
— நாக்கின் நுனியை மடித்து வாயின் மேல் அண்ணத்தில் வைத்தலை ‘கேசரி முத்திரை’ என்பர்.
— .சுவாசப் பயிற்சியின் போதும், மற்ற நேரங்களிலும் நாக்கை மடித்து மேலே வைப்பது சக்தி ஓட்டத்திற்க்கு உதவும்.
— நாக்கை மடித்து வைத்திருப்பது பிராண சக்தியை உடலின் முன், பின் புறங்களில் பரவச் செய்கிறது. இது நாடி மூலமாக பிராணனை உடல் முழுவதும் பரவச் செய்யும்.
எளிமையான சுவாசம்
— நமது சுவாசம் பெரும்பான்மையான நேரத்தில் தன்னிச்சையாக நிகழ்கிறது.
— எளிய சுவாசம் என்பது மூக்கின் வழியாக சுயநினைவுடன் சுவாசிப்பது. வயிறை நன்றாக சுருக்கி மற்றும் விரித்து சுவாசிப்பது நன்று.
— வசதியாக அமர்ந்து சுவாசிக்கவும். சுவாசிக்கும் போது மனதை ஒருநிலைப் படுத்தவும்.
பிராண சுவாசம்
— நாடி துடிப்பின் லயத்தில் 6-3-6-3 / 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் எண்ணவும். இதுவே நம் உடலின் லயம்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது வயிற்றை விரித்து நாடி துடிப்பின் — லயத்தில் 6எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும், வெளிவிட்டவாறே வயிற்றை உள்ளிழுத்து 6 எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும். இது ஒரு சுழற்சி. இதைப் போல் 2-3 நிமிடம் செய்யலாம். பழகிய பின் எண்ணிக்கையை 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் கூட்டலாம்.
யோகிகளின் சுவாசம்
— இது பிராண சுவாசத்தைப் போல் தான் ஆனால் இம்முறை எண்ணிக்கை 8-4-8-4. உள்ளிழுக்கும் போது 6 எண்ணிக்கை வயிற்றை விரித்தும் மீதி 2 எண்ணிக்கை நெஞ்சை விரித்தும் சுவாசிக்கவும். 4 வரை நிறுத்தி, 8 எண்ணிக்கை மூச்சை வெளியேற்றவும். 2-3 நிமிடம் தொடரலாம்.
— சுவாசிக்கும் போது விரல் நுனியால் நுரையீரலுக்கு சக்தியூட்டலாம்.
சமப்படுத்தும் சுவாசம்
— பிராண சுவாசத்தைப் போலவே ஆனால் வல, இட நாசி வழியாக மாற்றி மாற்றி சுவாசிக்கவும்.
— வலது நாசியை கட்டைவிரலால் மூடி இடது நாசியால் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
— இடது நாசியை இட கட்டை விரலால் மூடி வலது நாசியால் சுவாசத்தை வெளிவிடவும். வலது நாசியால் இட நாசியை மூடியவாறே உள்ளிழுக்கவும்.
— வலது நாசியை மூடி இடது நாசியால் வெளியேற்றவும்.
— இது ஒரு சுழற்சி. தினமும் 2-3 நிமிடம் செய்யலாம்.
— 6-3-6-3 எண்ணிக்கையிலும் செய்யலாம்.
— இதை தினமும் செய்தால் ஒற்றை தலைவலி வருவதை தவிர்க்கலாம்.
கர்மாவும் சிகிச்சையும்
— நோயுறுவதும், அறிய நோயில் துனுபுறுவதும் உங்கள் கெட்ட கர்மா என்றால், உங்களை குணமடையச் செய்வது எங்கள் நல்ல கர்மா.
— நாங்கள் உங்களை குணப்படுத்துகிறோம்.
— சரியான முறையில் உங்களை சரி செய்வதின் மூலம் உங்கள் கெட்ட கர்மா எங்களிடம் வருவதில்லை. நீங்களே கர்மாவின் பாடங்களை படித்த பின்பே சிகிச்சை நடைபெறுகிறது. கர்மாவை நீங்களே, நீங்கள் மட்டுமே சமன் செய்கிறீர்கள்.
— நாங்கள் அதை எப்படி செய்வது என கற்றுத் தருகிறோம்
— கர்மாவை வேறொருவருக்கு மாற்ற முடியாது. நீங்களே உங்கள் கர்மாவை சமன் செய்து நிர்வகிக்க வேண்டும்.

Wednesday, July 29, 2015

மூல நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகு

மூல நட்சத்திரம் உயர்வானது. ஆஞ்சநேயருடைய நட்சத்திரம்.
மிகப்பெரிய கல்வியில் சிறந்தவர்கள் பிறந்த நட்சத்திரம். மிகப்பெரிய பிரபலங்கள் ,உழைப்பால் உயர்ந்த கோடீஸ்வரர்கள் பிறந்த நட்சத்திரம்.
எந்த நட்சத்திரமனாலும் அவரவர் பூர்வ ஜென்ம பாவ புண்ணியம் அடிப்படையில் தான் நிகழ் காலம் அமைகிறது.
ஆண் மூலம் அரசாளும்;
பெண் மூலம் நிர்மூலம்!
ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.
'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.
இது தவறு எனில், இப்படியான நம்பிக்கை ஏற்படக் காரணம் என்ன? நெருப்பில்லாமல் புகையாதே?!
இதற்கான பதிலை மிக நுணுக்கமாக ஆய்ந்தறிய வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.
எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்’ என்றாகிவிட்டது.
அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்’ எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்’ என்றாகிவிட்டது.
எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர் களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும்.
- மாஸ்டர் ஸ்ரீநிவாஸ், தஞ்சாவூர்
நன்றி: சக்தி விகடன்

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலி

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்):
*
இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. 'அகிம்சா பரமோ தர்ம' (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்து தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பலரும் ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உயிர் பலி இடுகின்றனர்.
*
இது போன்ற செய்திகளைக் கேள்வியுறும் பொழுது நம்மில் பலரும் ஆலயங்களில் பலியிடுவோரை மிகக் கடுமையாக நிந்திப்பதைக் காண்கிறோம். எனினும் புலால் உண்பவர்கள் அத்தகைய விமரிசனத்துக்கு உள்ளாவதில்லை. மேலும் பல நேரங்களில் ஆலய பலியினை எதிர்ப்பவர்களே அசைவ வழக்கத்தினை மேற்கொள்பவராக இருக்கின்றனர். இது புதிரன்றோ?.
*
உயிர் பலியிடுபவரோ 'புலால் உண்பதே கொடிய பாவம்' என்றும் புலால் உண்பவரோ 'ஆலயங்களில் உயிர் பலியிடுவதே கொடும் பாவமென்றும்' வாதிடுவர். இதற்கு முடிவு தான் என்ன? எவ்வகையிலும் உயிர்க் கொலை ஞாயமாகாது. தர்மங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப வகுத்துக் கொள்வதை விடுத்து அருளாளர்களின் அறிவுரைகளைச் செவி மடுப்பதே நன்மை பயக்கும்.
*
பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 63,64ஆம் பாடல்கள் (திருவருட்பா 6ஆம் திருமுறை):
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
-
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்!!
*
மேற்குறிப்பிட்ட பாடல்களில் பலியிட எடுத்துச் செல்லப் படும் உயிர்களைக் கண்டு பதை பதைக்கிறார் வள்ளலார். பாடலில் 'குக்குடம்' என்ற பதம் கோழியைக் குறிக்கும். மேலும் மீன் பிடிக்க உதவும் தூண்டில்; வலை இவைகளைக் கண்டால் (அவ்வுயிர்களின் நிலையினை எண்ணி) பயந்து நடுங்குகிறார் வள்ளல் பெருமானார்.
*
நம் நாட்டில் ஆலயங்களில் பலியிடப்படும் பிராணிகள் சுமார் 5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் முழுவதும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு மனித இனத்துக்காக (உண்ணும் பொருட்டு) பலியிடப் படும் பிராணிகளோ 65 பில்லியன் (அதாவது சுமார் 6500 கோடி பிராணிகள்). மீன் முதலிய நீர் வாழ் உயிரனங்கள் இந்த கணக்கில் சேராது.
*
மேற்கூறிய கணக்கில், மக்கள் தொகை மிகுந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்றான பாரத நாட்டின் பங்கு 10 சதவிகிதம் என்று கொண்டாலும் 'எத்தனை கோடி பிராணிகள் மனித இனத்திற்காக வதைக்கப் படுகிறது' என்று எண்ணும் பொழுது உள்ளம் பதைக்கும். 'சரி நான் ஒருவன் இன்று புலாலை நிறுத்தினால் உயிர்க் கொலை நின்று விடுமா ?' என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
*
உயிர்க்கொலையை முற்றிலும் ஒழித்து விட முடியாது. உண்மை; எனினும் நம்மை நாம் பாவச் செயலில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலும். நம்மைக் கருணையுள்ளவராக பரிணமித்துக் கொள்ள இயலும். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக்கிக் கொள்ள இயலும். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் (சிவ சிவ)

Saturday, July 25, 2015

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?
இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.
கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.
அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..
“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”
“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.
சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.
எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.
அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...
கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.
“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....
அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.
கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.
தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....
முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...
ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..

கேள்விகளும் சீர் மீகு பதி்ல்களும்

ஆன்மிக - ரகசியங்கள்
கேள்விகளும்
சீர் மீகு பதி்ல்களும்
செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?
அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
* சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
* கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா? பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
* பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா? இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
** மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன? சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
* திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள். சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.
* கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா? முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.
* சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்? நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
** நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்? பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
* பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்? விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
*
* விளக்கேற்றக் கூடிய திசைகள் யாவை? கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.
* நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
* பிரதோஷம் என்றால் என்ன? அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?
தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
** புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன? இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே செய்வது சரியா? என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.
* பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன? காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும். இவற்றைச் சரியாக செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.
* திருமணத்திற்குப் பின் பெண்கள் பிறந்த வீட்டு குல தெ#வத்தை வழிபடலாமா? புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.
* ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டை நதியில் விட்டுவிடலாமா? ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
** வீட்டிலிருந்து கிளம்பும்போது மூன்று பேராகச் செல்லக்கூடாது என்பது உண்மைதானா?
சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.
* வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை. முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.
* அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா? எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.
* செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.
* சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
** அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா? நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
*ஜாதகத்தில் பெண் சாபம் இருந்தால் நிவர்த்தி செய்வது எப்படி? இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது, குதிரைக் கொம்பாகிவிட்டது. பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படத் தோன்றுகிறது. இதற்குப்பரிகாரம் பிறக்கின்ற பெண் குழந்தைகளையாவது பாராட்டி சீராட்டி வளர்ப்பது தான்! பெண் குழந்தை பெற்றெடுப்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். ஜாதகப்படி பெண் சாபம் இருந்தால் சுமங்கலி பூஜை செய்யுங்கள்.
பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்? எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.
* கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா? நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது. அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.
* பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?
குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
** தற்காலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறார்களா? விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்? புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.
* கோயிலில் அரசமரம், வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன? அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை
"அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
* மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்.இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.
* வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்
** யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.
* கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா? அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.
* கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
*ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?
*வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா? வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.
* ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.
** சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.
நோய்க்கு மருந்தாவான்: காலையில் படுக்கையை விட்டு, ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்ல வேண்டும்.பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் கேசவாய நம என ஏழுமுறை சொல்ல வேண்டும்.
சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும்.
இரவில் உறங்கச்செல்லும் போது மாதவா... மாதவா என ஏழுமுறை சொல்ல வேண்டும்

சேவையே மேலான பாக்கியம்

சேவையே மேலான பாக்கியம்
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
'''சேவை''' என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் . நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட 'அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்' என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்படும்.
-''தெய்வத்தின் குரல்''

Friday, July 24, 2015

ஒருபொழுதும் இவர்களை நம்பவும் கூடாது,சகவாசஞ் செய்யவும் கூடாது.

கீழ் குறிப்பிடப்படுபவர்களை போலிவேடமிடும் கள்வர்களாக அறிந்து பிணமுண்ணும் நரிகளை விட இழிவாக எண்ணவேண்டும். ஒருபொழுதும் இவர்களை நம்பவும் கூடாது,சகவாசஞ் செய்யவும் கூடாது.
• எந் நேரமும் புகழுக்கு ஆசைப்படுபவர்கள்,
• தனக்கு ஒருவன் அற்பமான சிறு குற்றம் செய்திருந்த போதிலும் அதற்குச் சகியாமல் அவனுடைய பிராணனைப்பழிக்குப்பழி வாங்க சித்தமாயிருக்கிறவர்கள்,
• வஞ்சகம் துரோகம் மோசம் முதலான விதத்தில் தன்னுடைய காரியத்தை முடித்துக்கொள்ளுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருப்பவர்கள்,
• தப்பென்று அறிந்திருந்தபோதிலும் அதை விடாமலிருக்கும் வீண் பிடிவாதக்காரர்களும்,
• மரியாதை,மனவமைதி,தெய்வபக்தி இவைகளை கெடுக்கிறவர்கள்.

Thursday, July 23, 2015

அவதாரமும் காரணமும் ....

அவதாரமும் காரணமும் ....
ஜெய விஜயன் என இரண்டு பேர் ஸ்ரீமன் நாராயணனை காவல் காக்கும் தொழிலில் உள்ளவர்கள். யாராக இருந்தாலும், இவர்கள் அனுமதி கொடுத்தால்தான் ஸ்ரீமன் நாராயணனை பார்க்க இயலும். அப்படி ஒரு சமயம், சனகாதி முனிவர்கள், நான்கு பேரும் நாராயணனை பார்க்க வரும்போது, இவர்கள் தடுத்து விடுகிறார்கள்.
சனகாதி முனிவர்கள் நான்கு பேரும், எப்போது வேண்டுமானாலும் இறைவனை தரிசிக்க வரலாம் என்ற வரத்தை பெற்றவர்கள். அந்த நேரம் அதை மறந்ததால், சனகாதி முனிவர்கள், இந்த ஜெயவிஜயர்கள் இரண்டு பேருக்கும் சாபம் கொடுத்துவிடுகிறார்கள்.
அதாவது , மூன்று ஜன்மா பூமியில் வசித்து பிறகு இங்கு வரவும் என அந்த சாபம் ஆகும் .
ஜெயவிஜயர்கள், பரந்தாமனிடம் இதை சொல்லி கேட்டார்கள். முனிவர்களின் சாபம் உலகுக்கு நல்லதே ஆகும். அதன்படிதான் அனைத்தும். நீங்கள் அவர்களை தடுத்தது , தவறுதானே , என்றார்.
ஜெயவிஜயர்கள் இருவரும், நாராயணனிடம் கேட்டுக்கொண்டார்கள், மூன்று ஜன்மா என்பது அதிகமாக இருக்கிறது. நீங்கள் எங்களுடனே இருந்தால்தான் இது சித்தி ஆகும் என்று சொல்ல, சுவாமியும் அப்படியே ஆகட்டும் என்று கூறுகிறார்.
அதன்படி, முதல் ஜன்மா, ஜெயவிஜயர்கள்
ஹிரண்யாக்ஷன்,ஹிரண்யகசிபு என்று அண்ணன் தம்பியாக பிறக்கிறார்கள்.
ஹிரண்யாக்ஷன் மூலம் - வராக அவதாரம் எடுத்து பூமியை கடலுக்கு அடியில் இருந்து எடுத்து வெளியே வருகிறார் சுவாமி.
ஹிரண்யகசிபுவை அழித்து, அவனது மகனாகிய ப்ரஹ்லாதனுக்கு காட்சி கொடுத்து நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
2 வது ஜன்மா - ராவணன், கும்பகர்ணன் என இருவரும் அண்ணன் தம்பியாக பிறக்கிறார்கள்.= ராமாவதாரம்
3 வது ஜன்மா சிசுபாலன் , தந்தவக்த்ரன் என இருவரும் பிறக்கிறார்கள்.=கிருஷ்ணாவதாரம்
ஒன்று க்ருத யுகம், 2.த்ரேதா யுகம் 3,த்வாபர யுகம்
ஆக மூன்று தடவை இதுபோல் வந்து அந்த சாபத்தை நீக்கிகொள்கிரார்கள்.

Wednesday, July 22, 2015

வேட்டைத் திருவிழா.

வேட்டைத் திருவிழா. இவ்விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துட்ட மிருகங்களை கொன்றொழித்து,மக்களை காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலைக் கொண்டிருப்பர். இதே போல், எம்மை துன்புறுத்தும் அறுபகைகள், மும்மலங்கள் முதலிய விலங்குகள் ,நோய்கள் அவற்றை வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத்திருவிழாவை மேற் கொள்ளுவதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலே அல்லது இதற்கென தயார் செய்த வேட்டைக்கான இடத்திலோ மிருகங்களின் உருவங்களை வைத்து அங்கு அஸ்த்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசனிக்காயை பலியிடுவது வழக்கம். வேட்டையிலிந்து திரும்பியதும் பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்படும்.
- ''பக்திமலர்''

சிவபெருமானின் குரு

சிவபெருமானின் குரு ஒரு பதிவு
பொதுவாக நம் எல்லோருக்கும் குரு எப்படி அவசியமோ அதுபோல்தான் தெய்வத்துக்கும் குரு அவசியம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் தெய்வத்துக்கு தேவை இல்லை , இருந்தாலும், தெய்வமே தனக்கு என்று சொன்னால் அந்த குருவின் பெருமையை நாம் புரிந்துகொள்ள சொல்லப்பட்டதாகும் .
ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும்போது பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது , பார்வதி தேவி , சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள் .
சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், க்ருகப்ரவேசம் செய்யணுமே ., அதற்காக , தனது வீட்டு ஐயரை கூப்பிடவேண்டும் அல்லவா. அதுபோல்தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான் .
ராவணன் வந்து க்ருகப்ரவேசத்தை தடபுடலாக செய்தான் .சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவ பக்தன் மூன்று உலகிலும் இல்லையே.
காரியங்கள் முடிந்தன.இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா.அதற்காக, ராவணனை சிவ பெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன் , தாங்கள்தானே கொடுக்கவேண்டும்,கொடுங்கள் என்றான். அதற்க்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு , என்று சொன்னவுடன், ராவணன் கேட்டான், எதுகேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எதுவேண்டுமானாலும் கேள் என்றான்.
அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு க்ருகப்ப்ரவேச தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். இது எப்படி இருக்கு மக்களே ,பாருங்கள். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான்
இலங்கை ஆகும். அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக்கொண்டான்/

தீட்சை என்றால் என்ன ? சிறு விளக்கத்துடன் !

# தீட்சை என்றால் என்ன ? சிறு விளக்கத்துடன் !
`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.
மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.
மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.
மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.
நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.
முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.
இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன :
பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை
பரிச தீட்சை :
ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.
நயன தீட்சை :
ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.
பாவானா தீட்சை :
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.
யோக தீட்சை :
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
வாக்கு தீட்சை :
ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
நூல் தீட்சை :
சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.
உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.
எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது.

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா?

சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? இருக்கிறது என்றால் என்ன?
சர்ப தோஷம் என்பது என்னவென்றால் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம்.
சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம்.
ஆனால், கால சர்ப தோஷத்திற்கு கால சர்ப தோஷத்தை சேர்க்கக்கூடாது. கால சர்ப தோஷம் என்பது என்னவென்றால், எல்லாவற்றையுமே காலம் கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படிச்சாரு, வேலை கிடைக்கவில்லை. இல்லையென்றால் படித்ததற்கும், வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரியெல்லாம் கொண்டு போகும். இதேபோல, கூடுதலா 2 மார்க் வந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும், இல்லையென்றால் ஐஐடியில் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்களே இதெல்லாம்தான் கால சர்ப தோஷம்.
அதாவது வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது என்று சொல்வார்களே, அதுதான் கால சர்ப தோஷம். இதேபோல எல்லாவற்றையுமே தாமதமாக்கும். படித்து முடித்தால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தது பிறகு கல்யாணத்திற்கு எவ்வளவோ தேடினார்கள், கடைசியில் ஏதோ ஒன்று சிம்ப்பிளாக பார்த்து முடிக்க வேண்டியதா போய்விட்டது. சரி, குழந்தை அது அதைவிட தாமதம். பிறகு அதற்காக டாக்டர்களிடம் அலைந்து அதன்பிறகுதான் குழந்தை பிறந்தது. இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இப்படி கால, நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தி தரக்கூடியது கால சர்ப தோஷம்.
இப்படி கால சர்ப தோஷத்தில் இருப்பவர்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் கால சர்ப தோஷம் தொடரும். எனவே அந்தக் குழந்தையை வளர்க்கிற விதத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டும். குழந்தையை நெருக்குதல் கொடுக்காமல், கடினமாக நடந்துகொள்ளாமல் இயல்பாக திட்டமிட்டு வளர்க்க வேண்டும். இதுமாதிரி கொண்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம். இல்லை, கொஞ்சம் அவர்கள் மாறிப் போகிறார்கள் என்றால், அவர்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தால் அது கொஞ்சம் சிக்கலாகும். இதுபோன்று சில விஷயங்களெல்லாம் உண்டு. கால சர்ப தோஷ அமைப்பில் பிறந்த குழந்தைகளை பெருந்தன்மையாக கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள்.
அதைவிட்டு விட்டு, ஆரம்பத்திலேயே நீ டாக்டராக வேண்டும், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எதையும் விதைக்கக் கூடாது. நன்றாக படி, என்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம். அந்த நேரத்தில் என்ன விருப்பமாக இருக்கிறதோ அதில் சேர்ந்துகொள் என்று பேசி வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு டாக்டராக்குகிறேன் என்று சொல்லி வளர்த்துவிட்டு, கடைசியில் 2 மார்க் சிக்கல் வந்தால், அந்தக் குழந்தைக்கு அப்பா, அம்மாவோட எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பையனுக்கு வளர ஆரம்பித்துவிடும். கால சர்ப தோஷத்தில் பிறப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சந்திக்கிற அளவிற்கு பிள்ளைகளை முன்னெச்சரிக்கையோடு வளர்க்க வேண்டுமே தவிர, இப்படித்தான் ஆக வேண்டும், இதுதான் நல்லது, மற்றதெல்லாம் நல்லதில்லை என்றெல்லாம் வளர்க்கக் கூடாது.
கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?
சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு காளஸ்திக்கு செல்கிறார்கள். இதுபோல கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு என்று தலம் ஏதாவது இருக்கிறதா?
கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிறது. அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது. அந்த பைரவர் வாகனத்தோடு, நாயோடு இல்லாமல், அமர்ந்த நிலையில் தவக்கோலத்தில் இருப்பார் கால பைரவர். அவரை வழிபட்டால் இந்த கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும். பொதுவாக கால சர்ப தோஷத்திற்கு குலதெய்வ வழிபாடு, பிறகு மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவற்றவர்களுக்கு உதவுவது என்றெல்லாம் செய்தாலே கால சர்ப தோஷத்திற்கு பலன் கிடைக்கும்.
கால சர்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கு வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கிவிடும். 26இல் இருந்து 38 வயது வரை ஓரளவிற்கு பரவாயில்லை, ஒரு சிலதெல்லாம் கிளியராகும். ஆனால், 39இல் இருந்து 46 வயது வரை அதிகப்படியான உயர்வைத் தரும்.
எனவே கால சர்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவது நல்லது