Friday, July 31, 2015

பித்ரு சாபம்...பித்ருக்கள் அப்படியென்ன தன்மை இல்லாதவர்களா? க்ரூரமானவர்களா?
("வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
கேள்வி : நமது பித்ருக்கள் சாபமிட வாய்ப்புண்டு என்கின்றார்களே, பித்ருக்கள் அப்படியென்ன தன்மை இல்லாதவர்களா? க்ரூரமானவர்களா?
பதில் : அது அப்படி அல்ல. பித்ருக்கள் க்ருரமானவர்கள் அல்ல.சற்று விவரமாக ப்ர்ப்போம்.
ச்ராத்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். அதில் சந்தேகமே வேண்டாம். சாஸ்திரிகளை குறை சொல்வதும், சாக்குப் போக்குகளைத் தேடி கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகின்றது. இதை கைவிட வேண்டும். யாரிடம்தான் குறை இல்லை. ச்ராத்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும்.
ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் வருங்காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக் கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ரு சாபத்திற்கு ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.
பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று கேட்டால், அவர்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நமக்கு ச்ரமங்கள் ஏற்படலாம்.
யாருக்கெல்லாம் திருப்தி? ச்ராத்தம் செய்வதினால்
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்,
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வேதேவர்கள் என்ற தேவப்பிரிவினர்,
3. ஹோமத்தில் பாகம் பெறுகின்ற அக்னி பகவான்,
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்,
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்
களுக்கும்,
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்,
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.
பித்ருக்களின் அனுக்ரஹம்
நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள், இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால் நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.
தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ச்ராத்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவிருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

No comments:

Post a Comment