சுவாமியை அர்ச்சிக்கும் முறை பூக்களால் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் போது செடிகளில் பூக்கள் எவ்வாறு உண்டாகின்றதோ அவ்வாறு இருக்குமாறே சமர்ப்பிக்க வேண்டும் ஏனெனில் "புஷ்பம் பத்ரம் பலம் சைவ யதோத்பன்னம் ததா அர்ப்பயேத்". என்ற சாஸ்திர வாக்யதிற்கிணங்க புஷ்பம் , பத்ரம்,பழம் முதலியவைகளை அவை செடி மற்றும் மரங்களில் எப்படி உண்டாகின்றனவோ அப்படியே தெய்வங்களுக்கு சமர்பிக்க வேண்டும் ஆகவே புஷ்பங்களால் சுவாமியை அர்ச்சனை செய்யும்போது அவை மேல்நோக்கி இருக்குமாறே போட வேண்டும் என்று தெரிகிறது ஆனால் வில்வத்தினால் அர்ச்சிக்கும் போது மட்டும் வில்வ இலை கீழ் திசை நோக்கி இருக்குமாறு அஅதாவது தரையை நோக்கி கவிழ்ந்து இருக்குமாறு அர்ச்சனை செய்யலாம் என்கிறது சாஸ்திரம்
No comments:
Post a Comment