சிவபெருமான் ரிஷபவாகனம் ஏறுதலின் உண்மை
ரிஷபம் தர்மரூபம். அறம் இடபமெனப்பட்டதற்குக் காரணம் ('வ்ருஷ ஸேசநே' வர்ஷணாத் ஸர்வகாமாநாம் வ்ருஷப: - என்பது சிவதத்துவரகசியம்) நாம் விரும்பியவற்றை யெல்லாம் கொடுப்பதே.
இவ்விதம் அறத்தைத் தமக்கு ஊர்தியாகச் சிவபெருமான் கொண்டருளினார். அவர் அறவழியில் நடப்போர்க்கு அவரவர் விரும்பியவற்றை அருள் பவரென்னும் உண்மையைப் புலப்படுத்துவதாகும்.
இவ்விதம் அறத்தைத் தமக்கு ஊர்தியாகச் சிவபெருமான் கொண்டருளினார். அவர் அறவழியில் நடப்போர்க்கு அவரவர் விரும்பியவற்றை அருள் பவரென்னும் உண்மையைப் புலப்படுத்துவதாகும்.
அன்றியும் , சிவபெருமான் திரிபுர விஜய ம் செய்த காலத்துத் தேவர்களாற் கற்பிக்கப்பட்ட தேர்பூமியில் அழுந்தி வேதப்புரவி கற்பிக்கப்பட்ட தேர்பூமியில் அழுந்தி வேதப்புரவி இழுக்கமுடியாது இளைத்ததாகத், திருமால் விடைவடிவமாகச் சிவபிரானைத் தாங்கியமை இலிங்கப்புராணத்துக் கூறப்பட்டது.
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளும்.
'கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே
யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி
தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளி
லிடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ'
(திருவாசகம் திருச்சாழல்) என்றருளியதனாலும் அவ்வுண்மை தெளியப்படும்.

சிவபெருமான் ரிஷப வாகனம் ஏறுதலைப் பற்றி அறியத் தந்தீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.