Friday, July 17, 2015

கோவில் ஏன்????


கோவில் ஏன்????
கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஏன் அவ்வாறு கூறினர் என்பதற்குப் பல உண்மைகள் அதில் உள்ளன.
*கோபுரம்.
ஆலய கோபுரத்தை விட ஊரில் வேறு எந்த கட்டிடமும் உயரமாக இருக்கக்கூடாது எனபது அந்நாளையது எழுதப்படாத நீதி. ஏன்னென்றால் கோபுர கலசங்களில் வரகு, சாமை, கார், சம்பா......முதலிய நெல் தானியங்களை நிரப்பி வைப்பார்கள் நெல் நிரப்பப்பட்ட கூர்மையான கலசம் மிகச்சிறந்த இடி தாங்கியாக பயன் படும். அதுவும்மில்லாது நெல் பற்றாக்குறை வரும்பொழுது அதை உபயோகிப்பார்கள். நெல் நிரப்பப்பட்ட கூர்மையான கலசம் மிகச்சிறந்த இடி தாங்கியாக பயன் படும். கோபுரங்கள் மிக மிகப் பெரியதாக இருக்கும் ஏனெனில் அக்கால கருவூலமாக அது பயன்படுத்தப்பட்டது. போர்காலங்களில் அவ்வூர் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கவும் பயன்பட்டது. இராணுவத்தினால் ஆயுத கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது. ஆலய கோபுரத்தில் அந்நாட்டு சிறப்பையும், பல ஆன்மீக தத்துவங்களையும் வெளிப்படுத்த பல சிற்பங்கள் வடிக்கப்படிருக்கும்.
*குளம்.
மக்களின் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க. இன்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே மழைநீர் சேமிப்புத்திட்டத்தை செயல்படுத்தியது நம் ஆலயங்கள்.
*மண்டபங்கள்.
அரசவையாக, நீதிமன்றமாக, கலைக்கூடமாக, பாடசாலையாக........ பயன்பட்டது.
*தல விருட்சம்.
மர வளர்ப்பின் முக்கியத்தை வலியுறுத்த. பண்டைய காலங்களில் மரம் வெட்டுவது ஒரு கொலை செய்வதற்கு சமமாகக் கருதப்பது. மரங்களுக்கும் உயிர்கள் உள்ளன. எனவே ஒரு மரத்தை வெட்டும் முன் சில பரிகாரங்கள் செய்து வெட்டுவர். அதிலொன்றுதான், ஒரு மரம் வெட்டினால் பதினொன்று மரக்கன்றுகளைக் கட்டாயம் நடவேண்டும் என்பதாகும்.
*பிராகாரம்.
மக்கள் ஒன்று கூட,ஊர் நன்மைக்காக பொதுக்கூட்டங்கள் கூட்ட, சந்தை அமைக்க, பிள்ளைகள் விளையாடி மகிழ,..........
*பல அறைகள்.
தானியம் சேகரிக்க, கருவூலமாக, பொக்கிஷஅறையாக, மக்கள் பதிவுகளை வைக்க, நகராட்சி அலுவலகமாக......... இன்று நமக்கு கிராம பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் அக்காலத்தில் அவை இல்லை. மாறாக ஆலயங்களே corporation னாக செயல்பட்டது. குளம் வெட்டுவது, சாலை அமைப்பது, பாசன வசதி செய்வது போன்ற துறைகளை ஆலய நிர்வாகமே கவனித்து வந்தது. அதற்காகவே ஆலயத்திற்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.
*சிற்பங்கள்.
நம்மால் மறக்கப்பட்ட பற்பல உண்மைகளை நமக்கு நினைவுறுத்த.

No comments:

Post a Comment