Friday, July 3, 2015

பூஜைக்குரிய திசை;

பூஜைக்குரிய திசை;
விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போது சுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே சிறந்தது. பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி, பிற அம்மன்களை வழிபடும்போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம். அதாவது, அம்மன் கிழக்கு நோக்கி இருக்க, நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க, நாம் தெற்கு நோக்கியோ பூஜை செய்யலாம்.
*
திருடி வைத்த பிள்ளையாரை வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பது உண்மையா;
திருட்டு என்றாலே குற்றம் என்று சொல்லப்படும் போது எப்படி நன்மை கிடைக்கும்? இது போன்ற பொய், புரட்டுகளை நம்பி தவறு செய்யாதீர்கள்.
*
கோயில் வழிபாட்டில் காலபைரவரைத் தான் கடைசியாக கும்பிட வேண்டுமா;
வரிசைக் கிரமப்படி எல்லா தெய்வங்களையும் வழிபடும் போதே பைரவரையும் வழிபடலாம். கோயில் பூஜை முறையில் அர்த்தஜாம பூஜையின் போது தான் கடைசியாக கால பைரவர் பூஜை சொல்லப்பட்டுள்ளது உண்மையே. என்றாலும் சாதாரண முறையில் வழிபாடு செய்வதற்கு இது பொருந்தாது.
*
வெள்ளியன்று கடன் வாங்கவோ, பொருள்களை விற்கவோ கூடாது என்கிறார்களே ஏன்;
வெள்ளிக்கிழமையில் கடன் கொடுக்கத் தான் கூடாது. கொடுத்தால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். பொருட்களை
விற்பதற்கெல்லாம் கிழமை என்று எதுவுமில்லை. அப்படி பார்த்தால் விற்பனை செய்யும் எல்லாக் கடைகளுக்குமே விடுமுறையளிக்க வேண்டி வந்து வடும்.
*
வயசு பார்த்து வணக்கம் சொல்லுங்க!
நம்மை விட வயதில் மூத்தவர்கள் வந்தால், அவர்களை வணங்கி வரவேற்பது இயல்பு. ஆனால், இவ்வாறு வணக்கம் சொல்வதற்கு வயது வரம்பு இருக்கிறது. நம்மை விட மூன்று வயது அதிகமானவர்களையே வணக்கம் தெரிவித்து வரவேற்கலாம்.
அண்ணன், அக்காவுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தாது. அவர்கள் நம்மை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் கூட நமஸ்காரம் சொல்லலாம்.
*
தர்மசங்கடம் என்பதன் பொருள் என்ன;
நம்மால் செய்யக் கூடியதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு தடுப்பதே தர்மசங்கடம். சங்கடம் என்றால் "கஷ்டம்'. பசி ஏற்படும் போது சாப்பாடு கிடைக்காவிட்டால் கஷ்டம். சாப்பாடு இருந்தும் உண்ண வேண்டிய நேரத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வந்து பேசிக் கொண்டு இருந்தால் ஏற்படுவது தர்மசங்கடம். நல்லவர்களாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அவர்களுடன் இருக்கும் குணம் தர்மசங்கடம்.
*
குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் கணித்து எழுத வேண்டும்;
ஒரு வயது பூர்த்தியான பிறகு, எப்போது வேண்டுமானாலும் ஜாதகம் கணித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment