Saturday, August 22, 2015

அன்னதானம் செய்யாத பாவம் நீங்க பரிகாரம்;

அன்னதானம் செய்யாத பாவம் நீங்க பரிகாரம்;
*********************************************************************
மாமியார்,மாமனாருக்கு சோறு போடாத மருமகள்,மருமகளை அறையில் அடைத்து வைத்து சாப்பாடு கொடுக்காமல் கொடுமை செய்த மாமனார் மாமியார்கள்,உழைக்க வலுவில்லாத உண்மையான ஏழைகள் பசி என்று சொல்லியும் உணவில்லை என விரட்டியடித்த வர்களை பாவம் துரத்தும் .நாம் மட்டுமல்ல,இறந்து போன நம் முன்னோர்கள் இந்த பாவத்தைச் செய்திருந்தாலும் நம்மை அந்த பாவம் சும்மா விடாது.இப்படிப்பட்ட பாவம் தொலைய பரிகாரம் இருக்கிறது.
உண்மையான ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு கிழமையில் அன்னதானம் செய்யவேண்டும் .பவுர்ணமி சேர்ந்து வரும் நாட்களில் இத்தானம் செய்வது இரட்டிப்பு பலன் தரும்.
ஞாயிறு-எலுமிச்சை சாதம்
திங்கள்-தேங்காய் சாதம்
செவ்வாய்-தக்காளி சாதம்
புதன்-கீரை சாதம்
வியாழன்-சர்க்கரை பொங்கல்
வெள்ளி-வெண் பொங்கல்
சனி-புளியோதரை

No comments:

Post a Comment