சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் ராமபிரானின் அருள் பெற்றவர். ஒருமுறை அவர் ராமபிரானிடம், தனக்கு மோட்சம் தர வேண்டினார். ராமர் அவரிடம், "ஞான, கர்ம யோகம் இல்லாத உமக்கு மோட்சம் தரமுடியாது' எனச் சொல்லிவிட்டார். தன் கோரிக்கையை நிறைவேற்றும்படி, அவர் சீதையிடம் வேண்டுகோள் வைத்தார்.அவரது வேண்டுதலை கணவர் மூலமாக நிறைவேற்றி வைக்க, சீதையும் எண்ணம் கொண்டாள். ஒருநாள், ராமனுக்கு சீதை வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொடுத்த போது. அவரது வாய் சிவக்கவில்லை. "மனைவி மீது பிரியம் இருந்தால் தானே வாய் சிவக்கும்' என சீதா அவரிடம் செல்லமாகச் சிணுங்க, ராமன் நடுங்கி விட்டார்.
"ஏன்! உன் மீதுள்ள பிரியத்தில் என்ன குறை கண்டாய்?'' என கேட்க, இருவருக்குள்ளும் ஊடலே ஏற்பட்டு விட்டது.
மனைவியின் ஊடலைத் தீர்க்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்று சிந்தித்த ராமன், மீண்டும் அவளை அணுகிய போது, "என் மீது நிஜமாகவே பாசமிருந்தால், என் குழந்தை தியாகராஜனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்,'' என்றாள்.
இதனால் தான் ராமர் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ போனால் முதலில் தாயாரை வணங்கி கோரிக்கையை வைக்க வேண்டும். பிறகு தான் சுவாமியைப் பார்க்க வேண்டும். அங்கே போவதற்குள் தாயார் மூலமாக நம் கோரிக்கை அங்கே போய் விடும்.

No comments:
Post a Comment