Thursday, August 27, 2015

பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்?

பஞ்சபூத தலங்கள் என கோயிலை அமைத்தது ஏன்? 


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள். இவை ஐந்தும் சேர்ந்ததே உலகம். உயிர்கள் அனைத்தும் பஞ்சபூதத்தின் உருவாக்கமே. இந்த இயற்கை சக்திகளின் வடிவாக இருந்து நம்மைக் காப்பவர் இறைவன். இதை உணர்த்தும் விதத்தில் பஞ்சபூத தலங்களில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். திருவாரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் மண் லிங்கமாகவும், திருவானைக்காவலில் நீர் வடிவாகவும், திருவண்ணாமலையில் நெருப்பாகவும், காளஹஸ்தியில் காற்றாகவும், சிதம்பரத்தில் ஆகாயமாகவும் உள்ளார். 
* உற்சவரை வணங்கினால் மூலவரை தரிசித்த புண்ணியபலன் கிடைக்குமா?வெ.பரமசிவன், கிண்டி"உற்சவர்' என்றால் "திருவிழா நாயகர்' என்று பொருள். இவர் வலம் வரும் போது மூலவருக்குச் சமமான சக்தி உண்டு. சிதம்பரம் நடராஜர், திருச்செந்தூர் சண்முகர், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி போன்ற தலங்களில் உற்சவரே கருவறையிலும் இருப்பது சிறப்பம்சம். 

No comments:

Post a Comment