குழந்தை கிருஷ்ணர் தன் கால் பெருவிரலை சுவைத்த விஷயம், என்றும் பதினாறு வயது கொண்ட மார்க்கண்டேய மகரிஷிக்கு தெரிய
வந்தது. "ஏன் இப்படி செய்கிறார்?' என்று அறியும் ஆசையில் அவரைப் பார்க்க புறப்பட்டார்.
ஆனால், மாயக்கிருஷ்ணன் பலத்தமழை பெய்யச் செய்தார். ஆஸ்ரமத்தைச் சுற்றி கடும் வெள்ளம் சூழ்ந்தது. ஆனால், மார்க்கண்டேயருக்கு தான் மரணமே கிடையாதே! எனவே அவர் தண்ணீரில் குதித்தார். நீரில் மிதந்தார். வேறு வழியின்றி கிருஷ்ணர் ஒரு ஆலிலையில் சயனித்தபடியே அங்கு மிதந்து வந்தார். கட்டை விரல் வாயில் இருந்தது.
""கிருஷ்ணா! உன் கட்டை விரலை சுவைக்க காரணம் என்ன என தெரிந்து கொள்ளலாமா?'' என்றார்.
""மகரிஷியே! என் பக்தர்களில் பலரும் எனது திருவடிகளை அடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கின்றனர். அப்படி அந்த திருவடிகளில் என்ன தான் விசேஷம் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எனக்கும் வந்து விட்டது. அதனால் தான் கால்பெருவிரலை சுவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார். சேஷ்டையான கண்ணன் தான்!

No comments:
Post a Comment