Saturday, September 5, 2015

கடவுள் இருக்கிறார் என்பதை நிருபித்து காட்ட முடியுமா ??

கேள்வி :- கடவுள் இருக்கிறார் என்பதை நிருபித்து காட்ட முடியுமா ??
எனது பதில் :- எதற்கெடுத்தாலும் அறிவியலை முன்னிறுத்தும் நீங்கள் கடவுள் இல்லை என்பதற்க்கான அறிவியல் ஆதாரம் தர முடியுமா ?? அப்படி நிருபித்து காட்டிவிட்டால் நாங்களும் கடவுள் இல்லை என்று ஒத்துகொள்கிறோம்!!
எனது கேள்வி :- எதை வைத்து கடவுள் இல்லை என்கிறீர்கள் ??
பதில் :- நான் உணரவில்லை !!
எனது கேள்வி :- நான் அதை உணருகிறேன் என்றால் நீங்கள் ஒத்துகொள்வீர்களா ?? நான் தங்களது சொந்த விருப்பு வெறுப்பு காரணத்தை கேட்கவில்லை !! நான் கேட்பது கடவுள் இல்லை என்பதற்கான அறிவியல் ஆதாரம் மட்டுமே !!
பதில் : - ????
எனது கேள்வி :- அறிவியல் கூட இன்னும் கடவுள் இல்லை என்று ஒரு முடிவிற்கு வராதபோது நீங்கள் மட்டும் கடவுள் இல்லை என்று எப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள் ?? அப்ப நீங்கள் அறிவியலையும் மிஞ்சிவிடீர்களா?? நீங்கள் நாசா விஞ்ஞானிகளிடம் உங்கள் கருத்தை அறிவியல் ஆதரத்துடன் நிருபித்து காட்டலாமே !! நீங்கள் தான் கடவுள் இல்லை என்று கண்டுபிடித்த முதல் விஞ்ஞானி என்று விருது உங்களுக்கு கிடைக்கலாம் . எங்களோடு விவாதித்து என்ன பயன் ??
கேள்வி :- எனது ஐம்புலன்களுக்குதென்படாத கடவுளை எப்படி நம்புவது ?? எனவே கடவுள் இல்லை !!
எனது பதில் :- ஒரு பெண்ணின் பிரசவ வலியை நீங்கள் கண்ணால் காணலாமே தவிர அந்த விழியை ஆண்களாகிய நாம் ஒருபோதும் உணர முடியாது !! அதை உணரமுடியாததால் அந்த வலி பொய்யாகிவிடுமா ??? நாங்களும் கடவுளை கண்ணால் காணவில்லை ஆனாலும் அவரை உணர்கிறோம் !! அதை நீங்களாகத்தான் உணரவேண்டும், அடுத்தவர்கள் உணரவைக்க முடியாது !!
எனது கேள்வி :- கடவுள் இருக்கிறார் என்று கூறும் வேதங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டுதான் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தீர்களா ?? நான் கேட்பது இந்து மத வேதங்கள் மட்டும் அல்ல ??
பதில் :-ஆமாம் !! வேதங்கள் அனைத்தும் கட்டு கட்டு கதை !!
எனது கேள்வி :- அப்ப நீங்கள் வேதங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிடீர்கள் அப்படிதானே ?? எங்கே இந்து மதத்தின் நான்கு வேதங்களின் சுலோகங்களும் அதன் விளக்கங்களும் இப்போதே விளக்கி கடவுள் இல்லை என நிருபித்து காட்டமுடியுமா ??
பதில் :- இல்லை , நீங்கள் நிருபியுங்கள் !!
எனது பதில் :- வேதங்களை கட்டுக்கதை என கூறும் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்.
பதில் :- ????
எனது கேள்வி :- இப்படி கடவுளை தேடுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் எதை வைத்து கடவுள் இல்லை என உறுதியாக கூறுகிறீர்கள் ??

1 comment:

  1. வணக்கம்!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி!
    www.eppoluthu.blogspot.in

    ReplyDelete