மஹாளய பக்ஷத்தின் சிறப்பு
உயிர் நீத்த நம் மூதாதையர்கள் ஆத்ம சாந்தி அடையவும் மிண்டும் பிறப்பெடுத்தோ அல்லது ஆவியாகவோ அலையாமல் தெய்வத்தை அடைய வேண்டி தர்ப்பண வழிபாடுகளை, மஹாளய பக்ஷ சிரார்த்தங்கள் போன்றவற்றை செய்ய வேண்டிய முக்கியமான நாட்கள் மஹாளய பக்ஷ நாட்கள் ஆகும்.
ஒரு வருடத்தில் நாம் ஆற்ற வேண்டிய பித்ரு பூஜைகளை முறையாக செய்ய இயலவில்லை எனில் நாம் படும் மனவருத்தம் கணக்கற்றது. அப்படிபட்ட ஒரு நிலைமை ஏற்பட்டு கர்ம காரியங்களை முறையாக செய்ய இயலாமல் போனால் இந்த 16 நாட்களில் நாம் செய்யும் தினசரி தர்ப்பணம், தீர்த்த நீராடல்,படையல்,அன்னதானம் போன்றவற்றை செய்து பித்ருக்களின் ஆசியை நாம் பெறமுடியும்.
எவ்வித துன்பமும் இல்லாத வாழ்வு அமையவும், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களும் மஹாளய பக்ஷ தர்ப்பண பூஜைகளை கட்டயமாக மேற்கொள்ள வேண்டும். மஹாளய பக்ஷ திதிகளுக்கு உரித்தான பலாபலன்கள் மகத்தானவை.
இந்த மஹாளய பக்ஷ திதிகள் பாத்ரபத மாதத்தின் பௌர்ணமி ( பாத்ரபத மாதம் என்பது தமிழ் மாதங்களில் ஆவணியில் சில நாட்களும் புரட்சி யில் சில நாட்களும் ) தினத்தில் துவங்கி தொடர்ந்து வரும் அமாவாசை வரையுள்ள காலமாகும்.
ஒருவர் தம் முன்னோர்களுக்கு வருடத்தில் 96 முறை பித்ரு பூஜைகளையும் தர்ப்பண காரியங்களையும் செய்ய வேண்டும். இதில் இந்த மஹாளய பக்ஷ நாட்கள் மிக முக்கியமான நாட்களாகும்.
மஹாளய பக்ஷத்தில் நாம் கொடுக்கும் திலதீர்த்தம் ( எள் தீர்த்தம்) நம் முன்னோர்கள் மட்டுமல்லாமல் பித்ரு லோகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களுக்கும் ( மனிதன் அல்லாது மற்ற ஜீவராசிகளின் பித்ருக்களுக்கும்) உணவாக அமைகிறது. ஆகவே மிகுந்த பயனை ஏற்படுத்தக் கூடியது. ஒருவரின் வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் மகிழ்ச்சி ஆனந்தம் இல்லை என்றால் அவரின் முன்னோர்கள் திருப்திப்படவில்லை என்று அர்த்தம். ஆகவே முன்னோர் கடனை ஆற்றுவதே நம் முதற்கடன். இந்த மஹாளய பக்ஷ நாட்கள் அனைத்திலும் வழிபட வாய்ப்பு இல்லை எஎன்றாலும் மஹாளய அமாவாசை கலத்தில் மட்டுமாவது முன்னோர்களை வழிபட்டு பயன் பெறுவோம்
No comments:
Post a Comment