சத்குரு: உலகில் பாம்பை மிகவும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் மென்மையான அழகான உயிரினம் துரதிர்ஷ்டவசமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் உடனே அவற்றைக் கொன்றுவிட நினைக்கிறார்கள். இப்போது என் கையிலுள்ள இந்தப்பாம்பு சாரைப் பாம்பு. ரேட் சினேக், எலி சாப்பிடும் பாம்பு. பாதி விஷம் கொண்ட பாம்பு. ஆனால் அதைப் பாருங்கள். என்னுடன் எவ்வளவு நட்பாக இருக்கிறது. அது உங்களைக் கடிக்காது. அதற்கான விருப்பமும் கிடையாது. எலிதான் அதற்கு உணவு. நீங்கள் எலியாக இருந்தால் மட்டுமே அது உங்களைக் கடிக்கும். நீங்கள் எலியாக இல்லையென்றால் அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. விஷப் பாம்புகளை எப்படி கண்டறிவது? பெரும்பாலான பாம்புகள் அல்லது எல்லா பாம்புகளும் எது தங்கள் உணவோ அவற்றை மட்டுமே தாக்குகின்றன. இந்தியப் பாம்புகளில் 10லிருந்து 12 சதவீதம் வரை மட்டுமே விஷமானவை. குறிப்பாக நாகப் பாம்பு, விரியன்பாம்பு மற்றும் கட்டுவிரியன் ஆகியவை மிகவும் விஷமுள்ளவை. ஒன்று விஷமுள்ளதா, விஷமற்றதா அல்லது பாதி விஷம் கொண்டதா என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அதற்கு அதிக முயற்சி தேவைப்படாது. வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள பாம்புகளைப் பற்றிய எந்த ஒரு புத்தகத்தையும் திறந்து 10 நிமிடம் செலவழித்தால், ஒவ்வொரு பாம்பையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். உங்களைக் கடிப்பதில் அவற்றுக்கு விருப்பம் கிடையாது. பல வழிகளில், தினசரி அளவில், உங்கள் வாழ்க்கையை அவை காப்பாற்றி வருகின்றன. ஆனால் இப்போது என் கையிலுள்ள இந்தப் பாம்பு பாதி விஷமுள்ள பாம்பு. இது பழக்கப்படுத்தப்பட்ட பாம்பு அல்ல. காட்டில் வசிக்கும் பாம்புதான். இருந்தாலும் நம் யாரையும் கடிப்பதற்கு அதற்கு விருப்பமில்லை. அதன் குணமே அப்படித்தான். அவ்வளவு நட்புடன் இருக்கிறது. எல்லா பாம்புகளுமே மிகவும் நட்பானவைதான். நீங்கள் அவற்றை பயப்படுத்தும்போது மட்டுமே, அல்லது தான் துன்புறுத்தப் படுவோம் என்று அவை நினைக்கும் போது மட்டுமே அவை உங்களை கடிக்கக்கூடும். வன விலங்குகளிலேயே, மிகவும் அழகானவைகளில் பாம்புகளும் ஒன்று. இந்த சாரைப்பாம்பை நெருக்கமாகப் பார்த்தால் சில நிறங்கள் தெரியும். ஆனால் வேறு பல பாம்புகள் உள்ளன. அவை மிகவும் வண்ணமயமாக, மிகவும் அழகாக இருக்கும். பாம்புகள் நம் நண்பர்களா? உங்களைக் கடிப்பதில் அவற்றுக்கு விருப்பம் கிடையாது. பல வழிகளில், தினசரி அளவில், உங்கள் வாழ்க்கையை அவை காப்பாற்றி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில், நமது தானிய உற்பத்தியில் 30 சதவீத தானியங்கள் எலிகளால் உண்ணப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் பாம்புகளை அதிக அளவில் நாம் கொன்றுவிட்டோம். நமது சுற்றுப்புறங்களில் தேவையான பாம்புகள் இருந்தால், இன்று பல மனிதர்கள் உணவின்றித் தவிக்க மாட்டார்கள். நிறையக் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி வாட மாட்டார்கள். ஏனெனில் தேவையான உணவு ஏராளமாக இருக்கும். பாம்புகள் நம் நண்பர்கள், எதிரிகள் அல்ல என்று நீங்கள் புரிந்து கொள்ளும்போது மட்டுமே, நம்நாட்டில் 30 சதவீத உணவு, அதிகமாக, ஏழைகளுக்காக, நமக்கு கிடைக்கும். எனவே அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது, நூலகத்திற்குச் சென்று வெப்ப மண்டல பாம்புகள் பற்றிய புத்தகம் எடுத்து விஷமில்லாத பாம்பை அடையாளம் கண்டு கொள்ள முயற்சிப்பதுதான். எப்படி நட்புடன் கையாள்வது? நீங்கள் ஒரு பாம்பைப் பிடித்து நட்புடன் இருக்க விரும்பினால், போய் அதை தாவிப் பிடிக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதன் அடியில் கை வைத்து இப்படி வெறுமனே தூக்குங்கள் (செய்து காண்பிக்கிறார்). எந்த எதிர்ப்பும் இல்லாமல் அது உங்கள் கையில் வரும். நீங்கள் அதனுடைய நண்பர் என்று அதற்குத் தெரியும். நீங்கள் அதை இழுக்கக்கூடாது, காயப்படுத்தக் கூடாது. நீங்கள் அதைக் காயப்படுத்தினால் மட்டுமே, அவை உங்களை காயப்படுத்த விரும்பலாம். நீங்கள் வெறுமனே இப்படித் தூக்கினால் அது உங்கள் நண்பனாக இருக்கும். ஈஷாவில் ஒவ்வொரு வருடமும் பள்ளிச் சிறுவர்களுக்கு இயற்கை விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அப்போது அவர்களை காட்டிற்குள் அழைத்துச்சென்று வன உயிர்கள் பற்றிய பாடங்களும் சுற்றுச்சூழல் பற்றிய பாடங்களும் மற்றும் வீர விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்களும் நடத்துகிறோம். அப்போது அவர்கள் பாம்பு பற்றிய உண்மைகளையும் கூட உயிருள்ள பாம்புகளை வைத்தே கற்றுக் கொடுக்கிறோம். எனவே அடுத்த முறை ஒரு பாம்பைப் பார்க்கும்போது, அது விஷமுள்ளதா விஷமற்றதா என அடையாளம் காணுங்கள். 90 சதவீத இந்தியப் பாம்புகள் விஷமற்றவை. எனவே நீங்கள் விளையாடுவதற்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
No comments:
Post a Comment