Wednesday, December 16, 2015

மணியோசை.

மணியோசை.
*****************
கோவிலில் பூஜை செய்யும்போது மணி அடித்தவாறு பூஜை செய்வது ஏன் தெரியுமா? அந்த பூஜா மணியின் மீது கடவுளின் வாகனம் இருப்பது ஏன்? இதற்க்கான விளக்கத்தை இனி படியுங்கள்..
நமது இருப்பிடத்துக்கு வரும் பெரியோர்களை மேளம் தாளம் முதலிய மங்கள வாத்ய ஓசைகளுடன் வரவேற்கிறோமல்லவா அதைப்போன்றே பூஜை செய்யுமிடத்துக்கு வரும் தெய்வங்களை வரவேற்பதற்காகவே மணி ஓசை எழுப்பப்படுகிறது
தேவர்களை வரவேற்பதற்காகவும் பூஜை செய்யும் இடத்தில் இருந்து நமக்கு இடையூறுகளைத் தரும் ராக்ஷஸர்களை விலக்குவதற்காகவும் தெய்வங்களை வரவழைப்பதற்குக்காகவுமே மணி ஓசை எழுப்பப்படுகிறது.
கருடாழ்வாரும் ‘வ்ருஷ்பம் எனப்படும் காளை மாடும் முறையே மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் வாகனங்கள். விஷ்ணுவும் சிவனும் அவரவர்களின் வாகனத்தின் மீது அமர்ந்து செல்லும்போது அந்த வாகனங்கள் எழுப்பும் ஒலியை ரசித்துக்கொண்டே செல்கின்றனர். கருடாழ்வார் எழுப்பும் இனிமையான ஒலியை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ரிஷபம் எஃஸுப்பும் இனிய நாதத்தை சிவனும் விரும்பி ரசிக்கின்றனர்.
பூஜையின் போது நாம் அடிக்கும் மணி ஓசை கருடாழ்வாரின் ஒலி அல்லது ரிஷபத்தின் சப்தம் போன்று இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் பூஜா மணியின் மீது கருடர் அல்லது ரிஷப உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த மணியின் ஒலி பூஜை செய்யப்படும் தெய்வங்களுக்கும் பூஜை செய்பவருக்கும் ஆனந்தத்தைத் தரும்.
(பூஜை செய்யும்போது அர்ச்சகர் கையில் இருக்கும் மணியை கூர்ந்து கவனித்தால்தான் இந்த பதிவு புரியும்)
சுபம் உண்டாகட்டும்.

No comments:

Post a Comment