ராமனை விட பரதன் எத்தனை வயது இளையவன்?
ராமன்தான் அண்ணன்; அவனுக்குத்தான் அரச பட்டம் உரியது என்று கூறி, தனக்குக் கிடைத்த அரச பதவியைத் துச்சமென மதித்தானே பரதன்! அண்ணா... அண்ணா... என்று அண்ணன் வன வாசம் முடிந்து திரும்பும் காலம் முழுதும் அவன் பாதுகைகளுக்குக் காவலிருந்தானே... அந்த பரதனுக்கும் ராமனுக்கும் எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?
ஒரு நாள்... ஆம், ஒரே ஒரு நாள்தான்!
ராமன் புனர்பூச நட்சத்திரம் நவமி திதி,பரதன் பூச நட்சத்திரம் தசமி திதி! இலக்குவனுக்கும் பரதனுக்கும் கூட வித்தியாசம் ஒரே ஒரு நாள்தான்! ஒரே ஒரு நாள் மூத்தவனுக்காக தனக்குக் கிடைத்த பரந்துபட்ட அயோத்தியை ஆளும் ராஜ்ஜிய உரிமையை ஒரு கணம் கூடச் சிந்திக்காமல் ஏற்க மறுத்தானே பரதன்... ஆ, எப்பேர்ப்பட்ட உத்தமன்!
ராமாயணத்தை வெறும் கதையாகப் படிக்காமல், அது சொல்லும் நுட்பமான விஷயங்களையும், நம் வாழ்க்கைக்கான நெறிகளையும் கற்றுணர்ந்தால் வாழ்வில் உய்யலாம்!

No comments:
Post a Comment