”பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.
இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று,நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே,இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான். பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.
போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று கொண்டிருந்தேன்.
போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன.இந்த நிலையில் என்னால் வேறு எதையும் பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான்.அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.
”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம்,யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.
”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா. பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

Kala pali koduthathu Aravan nor parparikan
ReplyDelete