Wednesday, January 13, 2016

'ஞானம்’

'ஞானம்’
என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ
கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை
ஓர் ஆலய உருவத்தில் அடக்க
முடியாது. ஆகவே பிரம்மன், உருவ
வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.

ஒவ்வொருமனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை
பிரம்மஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான்.
'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’
என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.
 
ஒருமுறை
சிவபெருமானின் திருவடி, திருமுடியைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும்
முயன்றனர். வராக வடிவில் பூமியில்
ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின்
திருவடியைக் கண்டறிய முடியவில்லை என்பதை
ஒப்புக்கொண்டு அவரைச் சரணடைந்தார். ஆனால்
பிரம்மனோ, திருமுடியைக் கண்டறிந்ததாகப் பொய் கூறினார். அப்போது
சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது
என சாபமிட்டார்.
 
இப்படியொரு
கதை அருணாசலேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிவபெருமான்
பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத்
துடன் பார்த்தால், ஒரு தத்துவம் புரியும்.
'பொய் வழியில் யாரும் சிவனைக்
காண முடியாது. பொய் வழியால் சிவனை
அறிந்ததாகக் கூறுபவர்கள் உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’ என்பதே இதன் ஆழ்ந்த
கருத்து.
 
யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி
னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது
ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார்
பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக்
கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன்
எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது,
அதனை அடையும் வழி எது
என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
சத்யமே
ஆன்மிகம்! தர்மமே தெய்விகம்!
 
இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான்.
அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்.
 

No comments:

Post a Comment