ஞாயிற்றுக்கிழமை சாஸ்திரப்படி சுபதினம் அல்ல
கூடுமானவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சுபநிகழ்ச்சிகளை தவிற்கவும்.
குறிப்பாக கிரஹப்பிரவேஸம் மற்றும் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை தவிற்கவும்
மக்கள் நிர்பந்தம் காரணமாகவே ஜோதிடர்கள் ஞாயிற்றுக்கிழமையில் சுபம் வைக்க ஒப்புக்கொள்கிறார்களே அன்றி மனப்பூர்வமாக மற்றும் சாஸ்திரப்படி அல்ல.
செவ்வாய், சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களிலும் சுபங்கள் தவிற்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் மிக ஆணித்தரமாக கூறியுள்ளது
வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் திருமணமும், கிரஹப்பிரவேஸமும் நல்ல கிழமையில் செய்திடுவதே நன்று.
24மணி நேர ஞாயிற்றுக்கிழமையை காட்டிலும் 100 ஆண்டுகள் வாழ்வே முக்கியம்.
எல்லாநாளும் நல்லநாள், எல்லா நேரமும் நல்ல நேரம் என்றெல்லாம் கூறினாலும் சுபநிகழ்ச்சிகளை நடத்திட சில விதிமுறைகள் சாஸ்திரங்களில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை என்ற ஒரு காரணத்திற்காக ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னுரிமை தருவதை தவிற்ப்போம்.
வெள்ளைக்கார ஆட்சிக்கு முன்னர்வரை யாரும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் செய்ததில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.
குறிப்பு: தின எண்ணிக்கை அடிப்படையிலான குழந்தை குளிப்பாட்டல், புண்ணியாவசனம், மஞ்சள் நீராட்டுவிழா ஆகியவகைளுக்கு ஞாயிறு விதிவிலக்காகும்.
No comments:
Post a Comment