Sunday, March 5, 2017

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?


 

உக்ர தெய்வ வழிபாடு தேவையா?

 

சைவத்தின் மேல் வேறு சமயம் இல்லை, இதில் எனக்கு உடன்பாடு ஜாஸ்தி. எனவே தற்காலத்தில் சில சுயநலவாதிகளால் பெரிது படுத்தப் பட்ட ப்ரத்யங்கிரா, சரபர், சூலினி, காளி, சண்டி,…இதுபோன்ற உக்ர தெய்வ வழிபாட்டில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை, ஏனெனில் வள்ளுவர் சொன்னது போல கனி இருக்க காயை ஏன் சுவைப்பானேன்?

 

நம்முடைய சிவாலய தெய்வங்களையும், நவக்ரஹ தைவதைகளையும் விட வேறு தெய்வம் தேவையில்லையே? ஆனால் மக்கள் இவைகளை மறந்து, தேவையற்ற வழிபாடுகளை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது? இது எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு பரவலான கேள்வி!

 

மேலோட்டமாக ஒன்றயும், உள்ளார்ந்து ஒன்றயும் உணருகிறேன்.

 

மேலோட்டம்:

 

மேலோட்டமென்றால் வீர சைவர்கள் என்போர் சிவபெருமானின் வழிதோன்றல்கள் அவர்கள் அப்படி பேசுவது இயல்பு, காரணம் அவர்களின் ஆத்மார்த்தமான குரு சாட்சாத் எம்பெருமான், அப்புறம் அவர்கள் எப்படி மற்றவற்றை விரும்புவார்கள். இது பொதுவான விருப்பமாகும்.

 

 

இறைவன் என்பது உருவமற்றது, நாமமற்றது, எங்கெங்கிலும் வியாபித்திருப்பது எதிலும் உள்ளது, எல்லாமானது, நிலையானது என்பார் பெருந்தகையோர்.

 

ஸ்ரீ ஸ்ரீ சிவனாரின் ருத்ர தாண்டவ நிலையில் அவிழ்சடையினின்றும் தோன்றியவர் ஸ்ரீ ஸ்ரீ வீரபத்திரர். இவர்தாம் சைவர்களின் மூலக் கடவுளானாவர். இவரை பின்பற்றியே சைவர்கள் வாழவேண்டும். இந்த வீரபத்திரரை வணங்கும் வீரசைவர்கள் புடலங்காய் உண்பது கூடாது. அங்காளம்மனை வணங்கமாட்டார்கள். அந்த அம்மன் இருக்கும் திசைகூட பார்க்கமாட்டார்கள் என்பது போல பல ச்மப்ரதாயங்கள் உண்டென்ற போதும் இன்று இவைகள் புறக்கணிக்க அல்லது மறைக்கப்பட்டுவிட்டது.

 

ஆனால் தங்களின் குறிப்பில் உள்ள சரபர், பிரத்யங்கரா, சூலினி, சண்டி, காளி போன்ற இறைவனார் திருமேனிகள் உருவகப்படுத்திக் காட்டப்பட்டிருப்பது ஏன்? என பார்ப்போமா?

 

முதலில் யார் இவர்கள்?

 

பிரத்யங்கரா, சூலினி, காளி இவர்கள் மூவரும் ஒரே உருவத்திலிருந்து பிரிந்தவர்கள்தான். எப்படி ?

 

ஸ்ரீ ஸ்ரீ அம்பாளின் நிலைகள் ஐந்தாகும்,

 

1. சுவாமியுடன் அம்பாள்.

 

2. பிரகாரத்தில் துர்கா,

 

3. தனது கோயிலில் சூலினி, காளி, சண்டி

 

4. தனது கோயிலில் பிரத்யங்கரா

 

5. தனது கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

 

இவ்வாறாக அம்பாளே ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிப்பதாக சாக்தம் கூறுவது பொய்யல்லவே !

 

அப்புறம் ஏன் இந்த பேதம் !!!

 

சரி சரபர் யார் ?

 

சாட்சாத் சிவனேயல்லவா !

 

சைவ வைணவ சேர்க்கையை மறைமுகமாக வரவேற்கும் நிலையை காட்டும் உருவம்தானே சரபர்.

 

சரபரின் கைப்பிடியுள் சிக்கிக்கொண்ட ஸ்ரீ நரசிம்ஹரை அணைத்து ஆலிங்கனம் செய்து இரண்டும் ஒன்றே எனும் பொருள் காட்டும் உயர்ந்த நோக்கல்லவா அது! அதனை சைவர்கள் வெறுப்பானேன் ?

 

சைவர்கள் ஒற்றுமைக்கு எதிரானவர்களா என்ன?

 

வேறு மாதிரியாக பார்ப்போம்.

 

நமது குடும்பத்திற்காக ஒரு மருத்துவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். எந்த நோய்க்கும் அவரிடம்தான் போவது நமது குடும்ப வழக்கம். ஆனால் சில தீர்க்க முடியாத நோய்களுக்கு அவரே வேறு மருத்துவருக்கு சிபாரிசு செய்வதில்லையா, கடிதம் தருவதில்லையா? எல்லாவித சங்கடங்களையும், தோஷங்களையும் திருக்கோயிலில் குடிகொண்ட எம்பெருமானாரால் தீர்க்க முடியும் என்றாலும் சில விசேஷமான தீர்வுகளுக்கு சுவாமியின் வேறு சில திருஉருவங்கள் பொறுப்பேற்று தீர்த்து வைக்கின்றன.

 

உதாரணமாக

 

பெரும் பணக்காரர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக சிலரை பணியமர்த்தி உள்ளார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதேனும் ஒன்று என்றால் இந்த பாதுகாவலர்கள் சும்மாயிருக்கமாட்டார்கள் அடிதடி என்று கொலைவரை செய்வார்கள், அவர்களுக்கு உணவு தந்து உடை தந்து அவர்களை தன்னுடனேயே வைத்து அவர்களிடம் தன்னை பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே கோபம் அளவிற்கு அவர்களை உசுப்பேற்றி வைத்திருக்கிறார் அந்த பணக்காரர்.

 

அந்த அடியாட்களுக்கு குடும்பம் இல்லையா? இருக்கிறது, குழந்தைகள் இருப்பார்கள், தாய் தந்தை இருப்பார்கள், அவர்கள் தனது வீட்டில் சிரிப்பார்கள், குழந்தைகளோடு விளையாடுவார்கள், மனைவியோடு சந்தோஷிப்பார்கள்.

 

ஆனால் அந்த பணக்காரர் அவர்களின் கோபத்தை மட்டுமே தனக்காக பயன்படுத்துவதால் அவர்கள் இங்கே வந்தால் கோபஸ்வரூபமாக (உக்ர ரூபமாக) காட்சி தருகிறார்கள்.

 

இதனைப் போலவே எம்பெருமானின் கோபாக்னியை (வீரபத்திரரின்) மட்டும் பயன்படுத்தும் போது அது ஒரு சில விஷயங்களுக்கு தீர்வாகிறது.

 

சாந்தமாக தீர்க்க முடியாதா என்ற கேள்வி எழும்.

 

காலில் குத்திய முள்ளை எடுக்க இன்னொரு கூர்முனை ஊசிதான் தேவை, அதை விடுத்து கொஞ்சம் பஞ்சை வைத்து கொண்டு முள்ளே வெளியே வா என்றால் முள் வராது.

 

பழமொழி: அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவான்.

 

இப்போது புரிந்ததா?  ஏன் உக்ர தெய்வ வழிபாடு என்று. யும் அளித்து ராஜயோகம் தருவாள் என்பது சத்தியம்.

4 comments:

  1. ஓம் நாம சிவாய நாமாக என் அன்பான நண்பருக்கு அன்பான சோமவார காலை வணக்கம் ( திருசிற்றம்பலம்

    ReplyDelete
  2. Ssss. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்(முடியும் அல்ல).

    ReplyDelete