Thursday, February 24, 2011

திருவாசகம்

திருவாசகம்

திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது
மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப்பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்துஎண்ணப்படுகின்றன.திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 656பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ளசிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரத்தை நாடுகிறவர்கள்பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கைகொள்ளல், அருளைப் பெறல்,அதில்ஆழ்ந்துதோய்தல்,இறைவனைக்காணல்,அவனோடுதொடர்புகொள்ளல்,அவனிடமிருந்துபெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப்பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல்ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.
நமசிவாய
திருவாசகத்தின் முதல் வரி நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை விளக்குகிறது.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
"நமசிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.

No comments:

Post a Comment