மரணதேவனைக் கண்டு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. அவன் எப்போது வருவான்- எப்படி வருவான்- வாழ்வு முடிந்தவர்களின் உயிரை எப்படிக் கவர்ந்து செல்வான் என்று யாருக்கும் தெரியாது.
சாவித்திரியின் கணவனான சத்தியவானின் உயிரை எமன் பறித்தபொழுது, தனது கணவனது உயிரைத் திரும்பத் தருமாறு சாவித்திரி எமனிடம் வேண்டினாள்.
""வாழ்வு முடிந்தவர்களின் உயிரைப் பறித்துச் செல்வதுதான் எனது கடமை. இந்தக் கடமையிலிருந்து என்னால் வழுவ முடியாது'' என்று கூறினான் எமன்.
""என் கணவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரது உயிரைத் திரும்பத் தராவிட்டால் என்னுயிரையும் பறித்துச் செல்லுங்கள்'' என்று சாவித்திரி வாதாடினாள்.
"கணவன்மீது நீ கொண்டுள்ள அன்பையும் உனது கற்பின் வலிமையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். என்றாலும் சத்தியவானின் உயிரைத் தரமுடியாது.
அதைத் தவிர வேறு வரம் கேள்; தருகிறேன்'' என்றான் எமன்.உடனே சாவித்திரி, ""என் மாமனார்- மாமியார் உள்ளம் மகிழ எனக்கு பிள்ளைப் பேறு அருள வேண்டும்'' என்று கேட்டாள். ""அப்படியே ஆகுக'' என்று எமதர்மன் கூறியவுடன், ""என் கணவன் இல்லாது நான் எப்படி குழந்தைச் செல்வத்தைப் பெற முடியும்?'' என்று சாவித்திரி கேட்டாள்.
வரம் கொடுத்த எமனால் வாய் பேச முடியவில்லை.""சாவித்திரி, உன் கற்பின் திறத்தால் என்னையே வென்றுவிட்டாய். நீயும் உன் கணவனும் நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வீர்களாக'' என வரம் அளித்து சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான் எமன்.
மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தர். அவர் பிறந்தபோது, ""இவனுக்கு பதினாறு வயது வரைதான் ஆயுள்'' என்று சிவபெருமான் கூறினார். மார்க்கண்டேயர் பதினாறு வயதை அடைந்தபோது தாயும் தந்தையும் மனவியாகூலம் அடைந்தனர்.
அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தை அறிந்த மார்க்கண்டேயர் உடனே சிவாலயம் சென்று லிங்கத் திருமேனியை மார்புடன் அணைத்துக் கொண்டார்.
எமன் தன் பாசக் கயிற்றால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க முயன்றபோது, "நீயே மெய்ச்சரண்' என்று தன்னை வந்தடைந்த மார்க்கண்டேயருக்காக லிங்கத் திருமேனியிலிருந்து சிவபிரான் எழுந்து, எமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றினார்.
மார்க்கண்டேயரிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.
கண்ணனும் பலராமனும் சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலவாசம் செய்தனர். ஆயகலைகள் அனைத்தும் கற்றனர். சாந்தீபனியின் மனைவி தன் பிள்ளை களைப்போலவே அவர்களிடம் அன்பு செலுத்தினாள். சிறு வயதில் தன் மகனை இழந்த அவள் கண்ணனைப் பார்த்து மனஆறுதல் அடைந்தாள்.
கண்ணனும் பலராமனும் குருவிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது, குருவும் அவரது பத்தினியும் மனவியாகூலத்துடன் இருப்பதைக் கண்டு, ""குருதேவா! உங்கள் பிரச்சினை என்ன என்று சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்'' என்றான் கண்ணன். அவர்கள் காரணத்தைக் கூறினர்.உடனே கண்ணன், ""வருந்த வேண்டாம். நான் எமனுலகம் சென்று உங்கள் மகனை மீட்டு வருகிறேன்'' என்று சொல்லி, எமனுடன் வாதாடி குருவின் மகனை மீட்டு வந்தான். அவனையே தனது குரு தட்சணையாக குருவுக்குச் சமர்ப்பித்தான்.
விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சான்று!
அவனது பாசப்பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதே உண்மை. அந்த எமதர்மனிடமிருந்து தப்ப ஒரே வழி ஆண்டவனைச் சரண் புகுவதுதான்.
கஜேந்திரன் மடுவில் இறங்கியபோது முதலை ஒன்று அதன் காலைக் கவ்வியதும், "ஆதிமூலமே!' என்று அந்த யானை ஓலமிட்ட போது, ஸ்ரீமன்நாராயணன் ஓடோடி வந்து, முதலையைத் தன் சக்கரத்தால் சேதித்து யானையைக் காப்பாற்றினார். எமபாசத்தால் கஜேந்திரனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
பெண்களுக்கு கற்பு எனும் ஒழுக்கம் அளப்பரிய வலிமையைத் தருகிறது. கற்பிற் சிறந்த சாவித்திரியிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.சாவித்திரியின் கணவனான சத்தியவானின் உயிரை எமன் பறித்தபொழுது, தனது கணவனது உயிரைத் திரும்பத் தருமாறு சாவித்திரி எமனிடம் வேண்டினாள்.
""வாழ்வு முடிந்தவர்களின் உயிரைப் பறித்துச் செல்வதுதான் எனது கடமை. இந்தக் கடமையிலிருந்து என்னால் வழுவ முடியாது'' என்று கூறினான் எமன்.
""என் கணவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரது உயிரைத் திரும்பத் தராவிட்டால் என்னுயிரையும் பறித்துச் செல்லுங்கள்'' என்று சாவித்திரி வாதாடினாள்.
"கணவன்மீது நீ கொண்டுள்ள அன்பையும் உனது கற்பின் வலிமையையும் நான் பெரிதும் மதிக்கிறேன். என்றாலும் சத்தியவானின் உயிரைத் தரமுடியாது.
அதைத் தவிர வேறு வரம் கேள்; தருகிறேன்'' என்றான் எமன்.உடனே சாவித்திரி, ""என் மாமனார்- மாமியார் உள்ளம் மகிழ எனக்கு பிள்ளைப் பேறு அருள வேண்டும்'' என்று கேட்டாள். ""அப்படியே ஆகுக'' என்று எமதர்மன் கூறியவுடன், ""என் கணவன் இல்லாது நான் எப்படி குழந்தைச் செல்வத்தைப் பெற முடியும்?'' என்று சாவித்திரி கேட்டாள்.
வரம் கொடுத்த எமனால் வாய் பேச முடியவில்லை.""சாவித்திரி, உன் கற்பின் திறத்தால் என்னையே வென்றுவிட்டாய். நீயும் உன் கணவனும் நீண்ட காலம் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வீர்களாக'' என வரம் அளித்து சத்தியவானின் உயிரைத் திரும்பத் தந்தான் எமன்.
மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தர். அவர் பிறந்தபோது, ""இவனுக்கு பதினாறு வயது வரைதான் ஆயுள்'' என்று சிவபெருமான் கூறினார். மார்க்கண்டேயர் பதினாறு வயதை அடைந்தபோது தாயும் தந்தையும் மனவியாகூலம் அடைந்தனர்.
அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தை அறிந்த மார்க்கண்டேயர் உடனே சிவாலயம் சென்று லிங்கத் திருமேனியை மார்புடன் அணைத்துக் கொண்டார்.
எமன் தன் பாசக் கயிற்றால் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க முயன்றபோது, "நீயே மெய்ச்சரண்' என்று தன்னை வந்தடைந்த மார்க்கண்டேயருக்காக லிங்கத் திருமேனியிலிருந்து சிவபிரான் எழுந்து, எமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றினார்.
மார்க்கண்டேயரிடமும் எமன் ஏமாந்துதான் போனான்.
கண்ணனும் பலராமனும் சாந்தீபனி என்ற குருவிடம் குருகுலவாசம் செய்தனர். ஆயகலைகள் அனைத்தும் கற்றனர். சாந்தீபனியின் மனைவி தன் பிள்ளை களைப்போலவே அவர்களிடம் அன்பு செலுத்தினாள். சிறு வயதில் தன் மகனை இழந்த அவள் கண்ணனைப் பார்த்து மனஆறுதல் அடைந்தாள்.
கண்ணனும் பலராமனும் குருவிடமிருந்து விடை பெற்றுச் செல்லும்போது, குருவும் அவரது பத்தினியும் மனவியாகூலத்துடன் இருப்பதைக் கண்டு, ""குருதேவா! உங்கள் பிரச்சினை என்ன என்று சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்'' என்றான் கண்ணன். அவர்கள் காரணத்தைக் கூறினர்.உடனே கண்ணன், ""வருந்த வேண்டாம். நான் எமனுலகம் சென்று உங்கள் மகனை மீட்டு வருகிறேன்'' என்று சொல்லி, எமனுடன் வாதாடி குருவின் மகனை மீட்டு வந்தான். அவனையே தனது குரு தட்சணையாக குருவுக்குச் சமர்ப்பித்தான்.
விதியையும் இறைவன் மாற்றி எழுத முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சிகளே சான்று!
No comments:
Post a Comment