ராதா கிருஷ்ணன் மீது வைத்துள்ள தூய அன்பை வெளிப்படுத்திய சம்பவம் இது.
ராதா கிருஷ்ணனை மணம் புரியவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ராதைக்கு கிருஷ்ணன் மீதுள்ள அன்பு சிரிதளவும் குறையவில்லை. ராதையின் அளவிடமுடியாத அன்பை கண்டு கிருஷ்ணனின் மனைவிமார்கள் பொறாமைப்பட்டனர்.
ஒரு சமயம் அவர்கள் ராதையை சோதனைக்குள்ளாக்க திட்டமிட்டனர். அவர்கள் நன்கு கொதிக்கன்ற பாலை ராதையினடத்து கொடுத்து கிருஷ்ணன் அனுப்பியதாக கூறினர். ராதை கிருஷ்ணன் அனுப்பியது என்பதை கேட்ட மாத்திரத்தில் அந்த பாத்திரத்தில் என்ன இருக்கின்றது என்று கூட பார்க்காமல் அதை அப்படியே வாயில் போட்டு கொண்டாள். ராதைக்கு கண்ணன் மீது அவ்வளவு அன்பு.
இந்த சம்பவம் முடிந்து மனைவிமார்கள் கிருஷ்ணனிடம் வந்தனர். கிருஷ்ணன் வாய் புண்ணால் அவதிப்பட்டு கொண்டு இருந்தான். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது தான் அவர்கள் ராதையின் உண்மையான அன்பை புரிந்து கொண்டனர். ராதையின் ஒவ்வொரு அணுவிலும் கிருஷ்ணனே உள்ளார் என்பதை புரிந்து கொண்டனர். மேலும் இதன் காரணமாகவே ராதையை சூடான் பால் ஒன்றுமே செய்யவில்லையென்றும். மாறாக கிருஷ்ணனையே அது பாதித்தது என்றும் உண்ர்ந்தனர்.
இந்த சம்பவம் ராதை கிருஷ்ணன் மீது வைத்திருந்த புனிதமான அன்பை எடுத்துக்காட்டுகிறது. இதுவே எல்லையில்லாத சுயநலமற்ற அன்பாகும். "ராதை உணர்வு" உலகத்தில் நாம் அறியப்படுகிற அனைத்திலும் மேலான அன்பாகும். "ராதை உணர்வு" என்பது ராதையும் கிருஷ்ணனும் இரண்டற கலந்த நிலை. அந்த நிலையில் ராதை என்றும் கிருஷ்ணன் என்றும் தனித்து பார்க்க இயலாது. இந்த நிலையே அனைத்து யோக நிலையிலும் சிறந்தது. இதுவே ஒரு மனிதன் தன் வாழ்வில் (ஆன்மீக பயணத்தில்) அடையக்கூடிய உயர்ந்த மற்றும் கடைசி நிலையாகும்.
No comments:
Post a Comment