மின்சாரம், பஸ், பெட்ரோல் என விலைவாசி மூச்சு முட்டும் அளவு இருக்கும் இந்த
நேரத்தில், காஞ்சிப்பெரியவர் கூறும் இந்த அறிவுரையை மனதில் கொள்வோமே!
மனசில் எழும்புகிற பலதரப்பட்ட ஆசைகளுக்குத் தானே செலவெல்லாம் செய்கிறோம்? கண்டதைத் தின்னத் தோன்றுகிறது. சினிமா ஆசை, டிரெஸ் ஆசை என்று இவற்றுக்காகத் தானே செலவு கூடுகிறது. இந்தச் செலவுக்கெல்லாம் நிறைய சம்பாத்தியம் இருந்தால் தான் முடிகிறது. அதற்காக வேண்டாத தொழிலை எல்லாம் செய்யத் தொடங்குகிறோம்.
""ஐயோ! இதை தின்பது பாபம். இதைப் பண்ணுவது பாபம்'' என்று சாஸ்திரங்களைப் பார்த்து பார்த்து, மனசின் ஆசைகளை எல்லாம் குறைத்துக் கொண்டு விட்டால், இத்தனை செலவுக்கு அவசியமில்லை. எளிய வாழ்க்கைக்குரிய சம்பாத்தியம் தருகிற ஒரு தொழிலைப் பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருந்து கொண்டிருக்கலாம். வேண்டாத பொழுது போக்குகள், அலைச்சல்கள் இல்லாமல் இருந்தால், தெய்வசிந்தனையும் ஆத்மவிசாரமும் செய்ய நிறைய நேரமும் கிடைக்கும்.
ஒரு மாறுதல் வேண்டும். வெளிலோகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் ÷க்ஷத்ராடனம், தீர்த்தாடனம் செய்யலாம். கோஷ்டியாக பலர் சேர்ந்து யாத்திரை போனால், அதிலே வேறெந்தப் பொழுதுபோக்குக் கேளிக்கையிலும் கிடைக்காத ஆனந்தமும் கிடைக்கும். பஜனை, ஹரிகதா சிரவணம், உத்ஸவம் இவற்றில் கிடைக்கும் ஆனந்தம், வேண்டாத பொழுதுபோக்கில் கிடைக்கிற சந்தோஷத்தை விட மேலானது என்பது அப்போது தெரியும்

No comments:
Post a Comment