சூரபத்மன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். இந்திரலோகத்தையே தன் ஆட்சியின் கீழ்
கொண்டு வந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தைப் போக்கும்படி பிரம்மாவிடம்
சென்றனர். ""தேவர்களே! சூரபத்மனை உங்களால் அழிக்க முடியாது. ஆனால், நான் சொல்லும்
ஆலோசனைப்படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். உடனே, மன்மதனின் உதவியை
நாடுங்கள். யோகநிஷ்டையில் ஆழ்ந்திருக்கும் சிவனின் தவத்தைக் கலைக்கும்படி
கூறுங்கள். அப்போது ஆற்றல் மிக்க சுப்ரமண்யமூர்த்தி அவதரிப்பார். அவரால் மட்டுமே
சூரபத்மனை அழிக்க முடியும்,'' என்று தெரிவித்தார். மன்மதனால்சிவனின் தவம் கலைந்தது.
கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறுசுடர்கள் கிளம்பின.
கங்கைநதியில் உள்ள சரவணத்தை அடைந்தன. ஆறு தாமரை மலர்களில் ஆறுகுழந்தைகளாக
அவதரித்தனர். அந்நாளே வைகாசிவிசாக நன்னாள்.
No comments:
Post a Comment