சித்ரா பவுர்ணமி அன்று செய்ய வேண்டிய தானம் வருமாறு:-
ஒரு ஏழையை அழைத்து சாப்பிட சொல்லி, இலை மீது சாத மூட்டைகளை வைத்து, பானகம், நீர்மோர், விசிறி, வெற்றிலை பாக்கு, தேங்காய், தட்சணை, துளசி தளம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.
இந்த தானம் யமனுடைய சபையில் இருக்கும் சித்ரகுப்தன் என்னும் தேவதைக்கு சேர்ந்தது என்று சொல்லுவார்கள்.
சாதவகைகளை நைவைத்யம் செய்யாமல் தானம் கொடுப்பது கூடாது. ஆனால் சாப்பிடச் சொல்லாமல் தானம் மட்டும் கொடுக்கலாம். தானம் கொடுப்பதற்கு முன்னால் வீட்டில் உள்ளவர்களுக்கு சாத வகைகளை சாப்பிட கொடுக்கக் கூடாது.
ஆகையால் மேற்படி சாத வகைகளை தனியாகவே சமைப்பது நல்லது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று தானம் கொடுப்பவர் தானம் கொடுத்த பின்பு தான் சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment