மனித வாழ்வில் அவனுக்கு சொந்தமானது என்று எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக முருகப் பெருமான் ஆண்டியாக நின்ற இடம் பழனி. இந்த கோவிலில் உள்ள தண்டாயுதபாணி சிலை நவ பாசாணத்தால் செய்யப்பட்டதாகும். நவ பாசாணங்கள் மருத்துவக் குணம் கொண்டவை. அவற்றின் பெயர்கள் வருமாறு:-
லிங்க பாசாணம் (இதய வலிமை), குதிரை பல் பாசாணம் (நரம்புத் தளர்ச்சி), கார்முகில் பாசாணம் (சூடு தணிக்க), ரசசெந்தூரம் (தோல் வியாதிகளுக்கு), வெள்ளை பாசாணம் (கண் கோளாறு நீங்க), ரத்த பாசாணம் (தாது குறையை நீக்கும்), கம்பி நவாசரம் (உடலில் உள்ள துர் நீரை வெளியேற்றும்), கவுரி (பொதுவான மருத்துவ குணம்), சீதை (அனைத்து பாசாணங்களையும் வேலை செய்ய வைக்கும் தன்மை உடையது).
No comments:
Post a Comment