Wednesday, October 3, 2012
பூஜ்யங்களை ஆதாரமாகக் கொண்ட பணராஜ்யம் நிலைத்திருக்காது
1லட்சத்து 76 ஆயிரம் கோடி, 1லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று கோடிகள் இன்றைய அரசியலில் ஏலம் விடப்படுகின்றன. இவ்வளவு பணம் தங்களிடம் இருப்பதால் "நானே ராஜா' என்று பீற்றிக்கொண்டு திரிகின்றனர் சிலர்.
எண்ணுக்குப் பின்னே பூஜ்யங்களைத் தொடர்ந்து சேர்க்கும் போது கோடி கோடியென கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பணத்தால் பயனே இல்லை என்கிறார், இந்த உலகத்துக்கே சொந்தக்காரரான ராமபிரான். ராஜா வீட்டுப்பிள்ளையான அவர், சிறுவனாக இருந்த போதே உலகை வெறுத்தார். அரசனுக்குரிய எந்த சுகத்தையும் அனுபவிக்கவில்லை. விஸ்வாமித்திரர் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். ராமரும் அதற்கு பதிலளித்தார். அப்போது செல்வத்தைப் பற்றி ராமர் கருத்து சொல்கிறார்.
""உலகில் செல்வத்தை ஒரு வரம் என எண்ணுகிறார்கள். ஆனால், அது எல்லாப் பிரச்னைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக இருக்கிறது. எப்படி கிணற்றுக்குள் பூத்த பூவால் யாருக்கும் பயனில்லையோ, அதுபோல் செல்வத்தால் பெரிய பயன் கிடையாது. தீப்புண் பட்டவனால் எப்படி ஒரே இடத்தில் நிற்கமுடியாதோ, அதுபோல் செல்வமும் ஓரிடத்தில் நிலைக்காது. அது பயனற்றவர்களைச் சென்று சேருகிறது. பாம்புக்கு பால் வார்த்தாலும் அதன் விஷம் எப்படி குறையாதோ, அதுபோல் செல்வத்தை வாரி இறைத்தாலும் தீமைகள் தான் உண்டாகும்,'' என்றார் பூஜ்யங்களை ஆதாரமாகக் கொண்ட பணராஜ்யம் நிலைத்திருக்காது என்பது இப்போது புரிகிறதா
No comments:
Post a Comment