Wednesday, October 3, 2012
நேர்மையான ஆன்மிகவாதிகளையும், அரசியல் தலைவர்களையும் நமது தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா!
தலைவன் என்பவன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்பவனாகவும், ஒழுக்கத்தையும் உடையவனாக இருக்க வேண்டும். இப்போது, ஒழுக்கசீலர்களான தலைவர்களைப் பூதக்கண்ணாடி கொண்டு தான் அலச வேண்டியிருக்கிறது.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டதற்காக, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. விஷத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அப்போது அவர் தன் சீடர்களான பைடோ, கிரீட்டோ ஆகியோரை அழைத்தார்.
""நான் எக்ஸ்ளிப்யாஸி என்பவரிடம் ஒரு கோழி கடன் வாங்கினேன். அதைத் திருப்பிக்கொடுப்பதற்குள் என் நிலைமை இப்படியாகி விட்டது. நீங்கள் அவருக்கு அதை வாங்கிக்கொடுத்து என் கடனைத் தீர்த்துவிடுங்கள்,'' என்று சொல்லி உயிரை விட்டார். நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கடைபிடித்ததால் தான், இன்று அவர் நம்மால் நினைக்கப்படுகிறார்.
நேர்மையான ஆன்மிகவாதிகளையும், அரசியல் தலைவர்களையும் நமது தேசத்துக்கும் ஆண்டவன் தருவானா!
>
No comments:
Post a Comment