Monday, January 21, 2013

அன்பின் மூலம் தான் பகையை வெல்ல முடியும். புத்தர்

ஒழுக்கம் இன்றி நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்ஒழுக்கத்துடன் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது.
* மனதில் எழுகின்ற ஆசைத்தீயை அடக்கி வென்றவனைத் துன்பம் ஒருபோதும் தீண்டுவதில்லை. அதனால், தாமரை இலைத் தண்ணீர் போல உலக ஆசைகளில் பற்றின்றி வாழுங்கள்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் அடக்கம் கொண்டவர்களே உண்மையில் அடக்கமானவர்கள்.
* வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பவன் ஆயுள், அழகு, இன்பம், வலிமை ஆகிய நான்குவிதமான நன்மைகளைப் பெறுவான்.
* உண்மை பேசுபவர், மற்றவர் மனதைப் புண்படுத்தாதவர், மனதில் களங்கமற்றவர், பாவம் செய்ய அஞ்சுபவர் இவர்களே சமூகத்தில் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
* வலிமை குன்றிய உயிர்களைத் துன்புறுத்தாமலும், பிற உயிர்களைக் கொல்லாமலும், தன்னைப் போல எல்லா உயிர்களையும் நேசித்தும் வாழ்பவனே நல்லவன்.
* நம்மை விட அறிவில் சிறந்தவர்களோடு நட்பு கொள்ளுங்கள். முடியாவிட்டால் தனிமையை நாடுங்கள். மூடர்களோடு நட்பு கொள்ளாதீர்கள்.
* நம்மைச் சுற்றி வாழும் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுங்கள். வீண் வாக்குவாதங்களிலும், பொழுதுபோக்குகளிலும் ஈடுபட்டு காலத்தை கழிக்காதீர்கள்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகி விட முடியாது. ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்த்துபவனே அறிஞன்.
* இளமையும், உடல் வலிமையும் இருந்தும் சோம்பித் திரிந்து மந்த புத்தியோடு செயல்படுபவன் மெய்யறிவைப் பெற முடியாது.
* அறிவுள்ள எதிரியைக் கூட நம்பி விடலாம். ஆனால், அறிவில்லாத நண்பர்களை நம்பினால் ஆபத்தே உண்டாகும்.
* பகைமையை பகைமையால் வெல்ல முடியாது. அன்பின் மூலம் தான் பகையை வெல்ல முடியும்.
* உணவினை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள். கருணையோடு பிறருக்கு அளிக்கும் தானதர்மம், நம்மைக் கடவுளர் உலகில் கொண்டு சேர்க்கும்.
* பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் மனிதனின் ஆசை அடங்குவதில்லை. ஆசையின் விளைவு துன்பம் தான் என்பதை அறிந்தவனே ஞானி.
* நம் கண் முன்னே மனிதர்கள் இறப்பதைக் கண்ட பிறகும் கூட, நாம் மட்டும் இந்த உலகில் நிலையாக இருப்போம் என்று நினைப்பது மிகவும் விந்தையானது.
* பிறரிடம் நூறு குறைகளைக் காண்பவர்கள், முதலில் தம்மிடம் இருக்கும் ஒரு குறையையாவது போக்க முயற்சிப்பது நல்லது.
* பிறப்பால், இனத்தால் யாரும் உயர்வு தாழ்வு கொண்ட வரல்ல. அனைவர் உடம்பிலும் ஒரே ரத்தமே ஓடுகிறது. அனைவருக்கும் சரி சமமான நீதியேவழங்கப்படவேண்டும். உலகமக்கள் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் தான்.
* பூமியைப் போல பொறுமையையும், மலையைப் போல மனஉறுதியும், தெளிந்த நீரோடை போல மனத்தூய்மையும் கொண்டு வாழ்ந்தால் பிறவித்தளையில் இருந்து விடுபடலாம்.
* செல்வச் செருக்கு ஒருமனிதனை முட்டாளாக்கி விடும். செல்வத்தால் தன்னைத் தானே பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பாதீர்கள்.

No comments:

Post a Comment