Monday, January 21, 2013

ஸ்வயம்வர பார்வதி ஹோமம்

வழிபடும் தெய்வம்: பார்வதி தேவி, இரண்டு கலசங்களில் பார்வதி பரமேஸ்வரரை ஆவாகனம் செய்து வெண்பட்டு, மஞ்சள் துணிகள் சாத்தி, மாலை அணிவித்து வைக்க வேண்டும். பெண்ணுக்குரிய நட்சத்திரங்கள், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் செய்யலாம். காலை மாலை சுபவேளையில் செய்தல் நலம். சதுரமேடையில் ஹோமம் செய்க.

ஹோமப்பொருட்கள்: தாமரை மலர், விரளி மஞ்சள் 32 வகை யாகக்கூட்டுப் பொருள், ஜவ்வாது, அல், அரசு, நாயுருவி சமித்து, பால், பசுநெல், நிவேதனங்கள், சர்க்கரை அன்னம் பால் பாயாசம், உளுந்துவடை, மூப்பழங்கள்.


பலன்கள்: பெண்களுக்குத் திருமணத்தடை நீங்கி அழகான நல்ல கணவனை அடைவது உறுதி. கணவன் மனைவி அன்பு பலப்படும்.


மூலமந்திரம்: இதன் பயனைப்பெற துர்வாச முனிவர் சொன்ன 48 அனுவாகம் அம்பிகையின் வர்ணனை மந்திரம் சொல்வது வழக்கம். இலகுவாக. ஓம் ஹரம் யாகினி யோகி யோகேஸ்வதி ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ஸமமு முக ஹ்ருதயம் ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா. ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் த்ராம் த்ரீம் ஜம்ஜம் வநாக்யே வானதேவதே ஸ்வாஹா.


கந்தர்வராஜ ஹோமம்: பார்வதி பரமேஸ்வரனுடன் கந்தர்வராஜ மூர்த்தியை மூன்று கலசங்களில் மாலை அணிவித்து வெண்பட்டு, ரோஜாநிற பட்டுடன் அலங்கரித்து ஆவாகன பூஜை செய்து சதுர அக்னி குண்டத்தில் ஹோமம் தொடங்க வேண்டும்.


பொருத்தமான நாட்கள்: திங்கள், வியாழன், அமாவாசை, ஆண்களுக்கான ஜென்ம நட்சத்திரங்கள், காலை சுபவேளையில் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.


ஹோமப் பொருட்கள்: செந்தாமரை மலர், வெண்பொங்கல், 54 வகை யாகப் பொருட்கள், அரசு, வன்னி சமித்துக்கள், பசுநெய், உளுந்துவடை பாயாசம், பழங்கள் 5 வகை.


பலன்கள்: ஆண்களுக்கான திருமணத் தடை விலகும். நல்ல குணவதியான மணமகள் கிடைப்பது உறுதி.


மூலமந்திரம்: ஓம் கந்தர்வராஜா, வித்மஹே களத்ரதோஷநிவர்தகாய தீம தந்நோ யக்ஷப்ரசோதயாத். ஓம் ஸ்ரீம் வி வஸ்லாஸாய, தயாசிந்தாய, பூவித சீக்ரவராய, யக்ஷ ராஜாய விவாஹ ஸித்திப்ரதாய, வதூவர தோஷ ஸம்ஹராய, ஸர்வ தோஷான் விஸர்ஜயாய, ஸர்வக்ரஹான் அனுகூல ஸத்திதாய, உத்வாஹவாய கராய, கம்-காம் சௌம்- ஸ்ரீம் கந்தர்வராஜ பாப்ரம்மாய ஸ்வாஹா. ஓம் செய்த பின் ஒரு ஏழை தம்பதியர்க்கு அன்னமிடல் நல்லது.


வாஞ்சா கல்ப கணபதி ஹோமம்: இது மகா கணபதி ஹோமத்திற்குரிய விதிகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. மஞ்சள் நிற ஆடை அணிவித்து கணபதியை சித்தி புத்தியுடன் அலங்கரிப்பது ஒரு முறை. உச்சிஷ்ட கணபதி என்று சித்தி தேவியுடன் மட்டும் ஆவாகனம் செய்து, பஞ்சாங்க சுத்தியுள்ள நாளில் செய்வது, மனவிருப்பங்களை நிறைவேற்றும் இந்த ஹோமத்தின் மூல மந்திரம். ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் க்லாம்க்லெனம், வாஞ்சா கல்பகணேஸ்வராய க்லீம் கம் மம ஸர்வ கார்யம் சித்தி.. சித்தி- ஸாதய ஸாதய ஸ்வாஹா.

No comments:

Post a Comment