Monday, January 21, 2013

ஆவஹந்தி ஹோமம்

வழிபட வேண்டிய தெய்வங்கள்: பிரதானமாக அன்னபூரணி, விஷ்னு, இந்திரன், பகன், தாதா, பச்சை நிரத்துணி சாற்றி, மூன்று கலசங்களில் ஐவகை மலர்க் கதம்பம் சாற்றி ஆவாதிக்க வேண்டும். சிவாக்னி என்னும் முக்கோண ஓம குண்டம் அமைக்கவும்.

பொருத்தமான நாட்கள்: திங்கள், பவுர்ணமி, அமாவாசை, தொடங்கி 27 நாட்கள் இலகுமுறையில் செய்யலாம். காலை 6 முதல் 9 மணிக்குள். காஞ்சியில் வர்தந்த உற்சவ காலத்தில் செய்யப்படுகிறது.


ஹோமப்பொருட்கள்: தேன், செம்பருத்தி மலர், நவசமித்துகள், வில்வ இலை, தாமரை மலர், 16 வகை ஓம திரவியங்கள், பாணகம், பஞ்சகவ்யம், பசுநெய். நிவேதனங்கள்: மஞ்சள் சாதம், தயிரன்னம், கதம்ப சாதம், வடை, அப்பம், திரட்டுப்பால் ஆகியவை.


பலன்கள்: அரசு அனுகூலம், அரசாங்கத்தில் தொந்தரவின்மை, அரசியலார்க்கு ஆதாரம், நாட்டில் பஞ்சம் போகுதல், கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தடை இருப்பின் விலகும். ஆவகந்தீயும் அடுப்புத்தீயும் இருந்தால் நாட்டில் பஞ்சமில்லை போன்ற பழமொழி உண்டு.


மூலமந்திரம்: ஓம் பகவத்யைச வித்மஹே மாஹேச்வர்யைச தீமஹி தந்தோ அந்நபூர்ணா ப்ரசோதயாத். ஓம் ஆவஹந்தி விதன்வானோ குர்வானோ சீரமாத்மந, வாசாசி மமகாவச்ச அன்னபூர்ணேச சர்வதா- அன்ன பூர்ணாயை பவான்யை இதம்நமம ஸ்வாஹா. ஓம் ஆமாயத்தூ, சமாயந்து, விமாயந்து, ப்ரமாயந்து, ப்ரம்மசாறிண ஸ்வாஹார். பிறகு அன்னபூர்ணா அஷ்டகம், விஷ்ணு மந்திரதியானம் கூறலாம்.

No comments:

Post a Comment