ஒன்றும் செய்யமுடியாது விட்டால்கம்முன்னு இரு என்று சொல்கிறார்களே. கம்முன்னு இரு என்றால் என்ன?
வினாயகரின் மகிமையை உலகில் வழங்கும் ஒரு பழமொழியிலிருந்தே உணரலாம்.
நீ 'கம்' என்று பேசாமல் இருந்தாலே எல்லாம் சரியாக நடைபெறும் என்று சொல்வது வழக்கம். அதற்குப் பொருள் 'கம்' என்ற பீஜாக்ஷ்ரத்தை ஜபித்தால் அவர் எல்லாக் காரியத்தையும் நடத்திக் கொடுப்பார் என்பதாகும்..
கம்முன்னு இரு என்று சொல்வது கணபதியைக் குறிக்கும். ஓம் கம் கணபதியே நம என்றொரு மந்திரமுண்டு. மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமானைச் சிந்தித்துக் கொண்டிருப்பதையே கம்முன்னு இரு என்று சொல்வதாகக் கூறுவர். கம்’ என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்
No comments:
Post a Comment