Thursday, April 11, 2013
லிங்கோத்பவ காலம்!
லிங்கோத்பவ காலம்!
சிவராத்திரி ஐந்து வகைப்படும்.
அவை யோக சிவராத்திரி,
மாத சிவராத்திரி,
பக்ஷ சிவராத்திரி,
நித்ய சிவராத்திரி
மற்றும் மகா சிவராத்திரி.
மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமே மகா சிவ ராத்திரி.சிவபெருமானின் அருவுருவ வடிவான லிங்கோத்பவ வடிவம் உற்பத்தியான தினம் இது. அன்று இரவு 11.30 மணி முதல் 1.00மணி வரை உள்ள காலமே, ‘லிங்கோத்பவ காலம்! ஆகவே, சிவராத்திரியன்று குறிப்பிட்ட இந்த காலத்திலாவது சிவதரிசனம் செய்து பலன்பெற வேண்டும்.திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி. அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார். சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சந்தோஷமாக வாழ ஒரு வழி கிடைக்கும் சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வென்னீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித...்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும்.நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும். மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ''இருநிலனாய் தீயாகி'' எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.
No comments:
Post a Comment