ஒரு நெய் வியாபாரி கலப்பட நெய் விற்றதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டார். நீதிபதி அவருக்கு மூன்று விதமான தண்டனை விதித்தார். கலப்படம்
செய்த நெய் முழுவதையும், வியாபாரியே குடிக்க வேண்டும், அல்லது 20 கசையடி பெற
வேண்டும், இரண்டும் முடியாவிட்டால் பத்து லட்சம் அபராதம் கட்ட
வேண்டும்.
"பத்துலட்சத்தை விடுவதாவது!' என நினைத்த வியாபாரி, நெய்யைக் குடித்து விடுவதென முடிவெடுத்தார். ஓரளவு குடித்ததுமே நாற்றம் குமட்டியது. அதற்கு மேல் முடியவில்லை. எனவே, கசையடி வாங்கிக் கொள்வதாக அறிவித்தார்.
கசையடி சுள் சுள்ளென விழவே, ""ஐயோ! அம்மா!'' என அலறினார். பதினைந்து அடி வாங்கியபிறகு, இறந்து விடுவோம் என பயந்து, அடியை நிறுத்தச் சொன்னார். பத்து லட்சத்தை அபராதம் கட்டிவிட்டு தப்பித்தால் போதுமென ஓடினார்.
இப்படித்தான் அநேகர் இருக்கின்றனர். துன்பத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே, அதைப் போக்குவதற்கு கடவுளிடம் கேட்பதில்லை. தங்களால் தாங்க முடியாதென்ற நிலை வந்ததும், "கடவுளே! காப்பாற்று' என கோயிலை நோக்கி ஓடுகிறார்கள் துன்பத்தின் துவக்க கட்டத்திலேயே ""கடவுளே! எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொள்,'' என அவனிடம் சரணடைந்து விட வேண்டும். சரி தானே!

No comments:
Post a Comment