Monday, September 9, 2013

தலைக்கனம்' இல்லாத கணபதி!

கணங்களின் தலைவன்' என்னும் பொருளில் விநாயகருக்கு கணபதி, கணேசன், கணாதிபன், கணநாயகன் என்னும் பெயர்கள் உண்டு. ராகவ சைதன்யர் என்பவர் எழுதிய "மஹாகணபதி ஸ்தோத்திரம்' என்னும் நூலில் இவரை "கணக்ராமணி' என்று குறிப்பிடுகிறார். கணங்கள் பரிவாரம் போல சூழ்ந்திருக்க நடுவில் இருப்பவர் என்பது இதன் பொருள். தலைவராக இருப்பவருக்கு பிறர் சேவை செய்வது வழக்கம். ஆனால்,விநாயகர் சிறிதும் தலைக்"கனம்' கொள்ளாமல் தனக்குத் தானே காதுகளால் சாமரம் வீசிக் கொள்கிறார். அதனால் "சாமரகர்ணர்' என்றும் இவருக்குப் பெயருண்டு.

No comments:

Post a Comment