Monday, September 9, 2013

தந்தம் தியாகம் செய்த விநாயகர்

வியாசர் மகாபாரத ஸ்லோகங்களைச் சொல்ல, விநாயகர் அதை எழுத தயாரானார். எழுத்தாணிக்காக அவர் எங்கும் தேடிச் செல்லவில்லை. தன் வலதுபக்க தந்தத்தை ஒடித்து எழுத முற்பட்டார். "இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று யானையைச் சொல்வதற்கு காரணம், அதன் அழகான தந்தம் தான். ஆனால், அறிவு வளர்ச்சிக்காக ஒருவன் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்

No comments:

Post a Comment