Tuesday, September 10, 2013

சிவலிங்கத்தின் சிறப்பு.

லிங்கம் என்பதன் பொருள்கள்.
...
1, லிங் - லயம், கம் - தோற்றம். உலகு தோன்றி ஒடுங்கும் இடம் லிங்கம்.

2, லிங்கம் - பிரகாசம். அதாவது படைத்தல் முதலிய ஐந்தொழில்களால் உலகைப் பிரகாசம் செய்வது.

3, இலிங்கம் என்பது அடையாளம். அதாவது பரம்பொருள் உரிய அடையாளம் எனப்பல பொருள்படும்.

சிவலிங்கத்தின் சிறப்பு.

சிவலிங்கம் - சிவபெருமானை - இறைவனைக் காணுவதற்கு உரிய அடையாளம். லிம் + கம் - லிங்கம். லிம் - உலக வடிவில் எல்லா சராசரங்களும் லயிப்பதற்காக உரிய இடம். கம் - அவ்வாறு லயித்த பொருள்கள் அனைத்தும் அதில் இருந்தே வெளிப்படுவது. இலிங்கத்தின் அடிப்பாகம் நாற்கோணமாயிருக்கும். அது பிரம்ம பாகம். நடுப்பாகம் எண்கோணமாயிருக்கும். இது ஆவுடை என்ற பீடத்துள் அமைந்திருக்கும். இது விஷ்ணுபாகம். மேற்பாகம் ருத்ர பாகம். எனவே முமூர்த்திகளின் உள் அடக்கமே இலிங்கமாகும்.

இலிங்கத்தின் மூவகை அமைப்புகள்.

1, வியக்த லிங்கம் – அவயவங்களுடன் கூடிய விக்ரகங்கள்.
2, அவ்யக்த லிங்கம் – அவயவமில்லாது பீடமும், லிங்கமும் உள்ளது.
3, வியக்தா வியக்த லிங்கம் – முகமும் தோள்களும் உள்ள விக்ரகம்.

லிங்கம் அமைக்கப்படும் பொருளகள்.
1, சைலஜம். {கல்} 2, ரத்னஜம். {மாணிக்கம் மரகதம்} 3, லோகஜம். {பொன், வெள்ளி முதலியனவற்றால்} 4, க்ஷனிகம். { அரிசி, மணல், விபூதி, சந்தனம் முதலியவற்றால்}

“பரார்த்த லிங்கம்” என்பதன் பொருள்.

உலகிலுள்ள உயிர்களுக்கு அருள்புரியும் பொருட்டுத் தேவர்களாலும், மகரிஷிகளாலும், மானுடர்களாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் ஆகம விதிப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பரார்த்த லிங்கம் எனப்படும்.

பரார்த்த லிங்கத்தின் வகைகள்.

1, சுயம்பு லிங்கம். – தானாக உண்டானதும், கரடு முரடாக உள்ளதாயும் ரேகையற்றதாயும் இருப்பது.
2, தேவி லிங்கம் – அம்பிகையினால் வழிபடப்பட்ட்து.
3, திவ்ய லிங்கம் {தேவ லிங்கம்} – தேவர்களால் அர்ச்சிக்கப் பட்ட்து.
4, ரிஷி லிங்கம் – மகரிஷிகளால் – பூஜிக்கப் பட்ட்து.
5, மானுட லிங்கம் – இராமர் போன்ற மானுடர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.
6, பாண லிங்கம் – கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி, போன்ற புண்ணிய நதிகளின் மத்தியிலிருந்தும், நேபாளம் கேதாரம் முதலிய இடங்களிலிருந்தும் கிடைப்பது {பாணாசுரனால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள்.
7, இராக்ஷஸ லிங்கம். – அசுரர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கங்கள்.

ஏழுவகை லிங்கங்கள்.

1, தைவிக லிங்கம் – தேவர்களால் வழிபட்டவை. 2, தேவி லிங்கம் – அம்பிகையால் வழிபடபட்டவை. 3, சுயம்பு லிங்கம் – ஒருவரால் உண்டாக்கப்படாதது. தானே உருவானவை. 4, ஆரிஷ லிங்கம் – மகரிஷிகள் வழிபட்டவை. 5, மானுட லிங்கம் – மனிதர்களால் வழிபட்டவை. 6, திவ்ய லிங்கம் – அவதார புருஷர்களால் வழிபடப்பட்டவை. 7, அசுர லிங்கம் – அசுரர்களால் வழிபடப்பட்டவை. பாண லிங்கம் – பாணாசுரன் வழிபட்டவை. திவ்ய லிங்கம் – ஜோதிர் லிங்கங்கள்.

பாண லிங்கம் பற்றிய விபரம்.

2000 கைகளைப் பெற்றிருந்த பாணாசூரன் ஒரு சமயம் நாடொறும் 2000 சிவ லிங்கங்களைப் பூசித்து அவற்றை நர்மதை நதியில் விடுத்தான். இவ்வாறு பலகாலும் விடப்பட்ட சிவலிங்கங்களே இன்று பாணலிங்கங்களகக் கிடைக்கின்றன. இன்றும் நர்மதையில் மூழ்கி இவற்றை எடுத்து வழிபடுகின்றனர். இவை சிவ வழிபாட்டுக்குச் சிறந்தவை. நர்மதை நதிக்கரையில்தான் ஜோதிர் லிங்கத் தலமாக ஓம்காரேஸ்வரர் உள்ளது.

இறைவனின் மூவகை பற்றிய நிலைகள்.

1, உருவம் – விக்கிரக திருமேனி. அருவுருவம் – {உருவம் + உருவமற்ற நிலை} சிவலிங்க திருமேனி. 3, அருவம் – உருவம் அற்ற நிலை.

No comments:

Post a Comment