Monday, September 2, 2013

தேய்பிறை அஷ்டமியன்று பவுர்ணமி

இதென்ன அதிசயம்! அஷ்டமி எட்டாவது திதியாயிற்றே! அதிலும் தேய்பிறை அஷ்டமியன்று கிருஷ்ணர் பிறந்தாரே! அந்த நாள் எப்படி பவுர்ணமியாக முடியும்! இதோ! விளக்கம்...! கிருஷ்ணர் பிறந்தபோது நிலவிய கிரகநிலை பற்றிய குறிப்பு கமானிக்யா என்ற ஜோதிட நூலில் உள்ளது. அன்று வானமண்டலத்தில் எல்லா கிரகங்களும் சுபமான இடத்தில் இருந்தன. அந்நாள், தேய்பிறை அஷ்டமி திதியாக இருந்தாலும், கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் அன்று உதித்த நிலவு பவுர்ணமி போல் பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தி தெய்வாம்சத்துடன் அற்புதமான குழந்தையாக அவர் காட்சியளித்தார். கார்மேக வண்ணத்தில் இருந்த கிருஷ்ணர், மஞ்சள் பட்டாடையும் சில ஆபரணங்களும் அணிந்து காட்சியளித்தார். அவரைப் பெற்ற தாய் தேவகியும், ஒரு தேவதையைப் போல் ஜொலித்தாள்.

No comments:

Post a Comment