கிருஷ்ண ஜெயந்தியன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிட
வேண்டும். வாசல் முதல் வீட்டுக்குள் இருக்கும் பூஜையறை வரை பிஞ்சுக்கண்ணனின்
பாதத்தை வரைய வேண்டும். இதனால், கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக
ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரகோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம்,
பூக்கோலம் இடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்யலாம். அன்று காலை லட்சுமியின்
அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். கண்ணனுக்கு மிகவும் பிரியமான பால், தயிர்,
வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைக்க வேண்டும். துவாதச மந்திரமான "ஓம்
நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களை அவரது
படத்திற்கு தூவ வேண்டும். தூப தீபம் (பத்தி, கற்பூர ஆரத்தி) காட்ட வேண்டும்.
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது
அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment