Thursday, October 24, 2013

மந்திரக்கயிறு

கோயிலில் ராமாயணச் சொற்பொழிவு நடக்கும் போது, சொற்பொழிவாளர், "ஸ்ரீஜானகி காந்த ஸ்மரணம்' என்று சொல்ல, பக்தர்கள் "ஜெய் ஜெய் ராம ராம' என்று பதிலுக்குச் சொல்வார்கள். பாகவதம், மகாபாரத சொற்பொழிவுகளில் "ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' அல்லது "கோபிகா ஜீவன ஸ்மரணம்' என்று பேச்சாளர் சொல்வார். பக்தர்கள் பதிலுக்கு "கோவிந்தா! கோவிந்தா!' என்பர். நிகழ்ச்சி தொடங்கும் முன், இப்படி தெய்வநாமங்களைச் சொல்வதற்குக் காரணம் உண்டு. நாம் பொதுவாக நம் வீட்டு விஷயங்களையோ, உலக விஷயங்களையோ அருகில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருப்போம். அல்லது மனதிற்குள் எதாவது ஒரு சிந்தனை அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவற்றில் இருந்து மீட்டு, நம் மனதை "கடவுள் நாமம்' என்னும் மந்திரக் கயிற்றால் கட்டி ஒருமுகப்படுத்தவே இவ்வாறு செய்கிறார்கள்.

No comments:

Post a Comment