பார்வதியின் தந்தை தட்சன் யாகம் ஒன்றை நடத்தினார். இதற்கு தன் மகளையும்,
மருமகனையும் அழைக்கவில்லை. ஆனால், மற்ற தேவர்கள் இதில் கலந்து கொண்டனர். தன்
அனுமதியின்றி கலந்து கொண்ட அவர்களின் அகந்தையை அடக்க, சிவன் பைரவரை உருவாக்கினார்.
உக்ர மூர்த்தியாக புறப்பட்ட பைரவர், யாக குண்டத்தை அழித்தார். அப்போது அவருடன் ஒரு
நாய் சென்றது. வேதமே நாய் வடிவெடுத்து அவருடன் சென்றதாகச் சொல்வர். "பைரவ' என்னும்
திருநாமத்தில் உள்ள ப,ர,வ என்னும் எழுத்துகள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்
முத்தொழில்களை உணர்த்துகின்றன. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன்,
சந்திரன், ஆத்மா என்னும் அஷ்ட (எட்டு) சக்திகளைக் கொண்டு உலகை இயக்குவதால்,
அஷ்டபைரவராக காட்சி தருகிறார். சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்ட பைரவரையும் ஒரே
இடத்தில் தரிசிக்க, தனி சந்நிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி திதி மற்றும் ஞாயிறு
ராகுகாலம் பைரவரை வழிபட ஏற்ற காலம். எதிரிகளை அழித்து பயத்தைப் போக்குவதில் பைரவ
வழிபாடு சிறப்பானது.
No comments:
Post a Comment