செல்வம் தரும் திருமகள்-மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாரயணனின் இதயத்தில் வாசம் செய்பவள் அவரது மனைவி மகாலட்சுமி. ஸ்ரீ என்றும், திருமகள் என்றும் அழைக்கப்படும் லட்சுமியின் அருள் கடாட்சம் கிடைத்தால் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் அஷ்டலட்சுமிகளும் தாண்டவமாடவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவார்கள். மகாலட்சுமி எங்கே நிலையாக தங்குகிறாள் என்று தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து வாசலில் அரிசி மாவினால் கோலமிட்டு வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.
தூய்மையையும், தர்மத்தையும், பின்பற்ற வேண்டும். தாய் தந்தையரை வணங்கி அவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும்.
வீட்டுப்பாத்திரங்களை தூய்மையாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்கவேண்டும். தானியம், சாதம் ஆகியவற்றை சிதறக்கூடாது, வீணாக்கக்கூடாது.
பசுவைத் தெய்வமாக வணங்கி பாதுகாக்க வேண்டும்.
இந்த செயல்கள் எல்லாம் எங்கே பின்பற்றப்படுகிறதோ அங்கே லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது தர்ம சாஸ்திரம்

No comments:
Post a Comment